![]() |
||
|
|
உயிர்பெறும் ஈரான் எரிவாயு ஒப்பந்தம் ஈரானிலிருந்து குழாய் மூலம் எரிவாயு திட்டம் விரைவில் நிறைவேற் றப்படும் என இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்திருக்கிறார். ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக போடப்படும் குழாய் வழி எரிவாயு திட்டம் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப் பீட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. 2600 கிமீ தூரம் உடைய 'அமைதித் திட்டம்' 1994 ஆம் ஆண்டே உதித்த திட்டமாகும். அப்போது இந்தியாலிபாகிஸ் தான் இடையே நிலவிய பதட்டத்தினால் தடை ஏற்பட்டது. 70 சதவீத எரிபொருளை இறக்குமதி செய்தே தீர வேண்டிய நிலையில் உள்ள இந்தியாவுக்கு ஈரானுடனான குழாய் வழி எரி வாயு திட்டம் மிகுந்த பயனு டையதாக இருக் கும் என கருதப் படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மணி ஷங்கர் ஐயர் மத் திய பெட்ரோலிய அமைச்சராக இருந்த போது இத்திட்டப் பணிகள் முனைப்புடன் தொடங்கப்பட்டன. பின்னர் அமெரிக்கா வின் மறைமுக தலையாட்டுதலின் பேரில் இத்திட்ட முயற்சிகள் தொய்வடைந்தன. அதிபரின் சமீபத்திய இந்திய வருகை இத்திட்டம் நிறைவேற்றப்படக் கூடிய ஒரு நம்பிக்கை ஒளிக் கீற்றை ஏற்படுத்தின. இந்நிலையில் ஈரான் எரிவாயு குழாய் ஒப்பந்தம் மெய்ப்படும் சாத்தியக் கூறுகள் பெருகி உள்ளன. ஆண்டு ஒன்றுக்கு 50 லட்சம் டன் எரிவாயு இந்தியாவுக்கு இந்திட்டத்தின் மூலம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன் பலன் 25 ஆண்டு களுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||