![]() |
||
|
|
முஸ்லிம்களுக்கு சிறப்புரிமை வழங்க மாவோயிஸ்டுகள் உறுதி நேபாளம் 80 விழுக்காடு இந்து மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடு. தற்போது அங்கு மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்டு மாவோயிஸ்டுகள் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்து ஆட்சிக்கு வந்துள்ளனர். இந்நாட்டில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். முஸ்லிம்களுக்கு 'முஸ்லிம் முக்தி மோர்ச்சா' என்ற கட்சி உள்ளது. 1996ல் நேபாளத்தில் மாவோ யிஸ்டுகள் கிளர்ச்சியைத் தொடங்கிய போது தெரைபுத் பகுதியில் அதிகமாக வாழும் முஸ்லிம்கள் அவர்களுக்கு ஆதரவு தந்தனர். ஆளும் மாவோயிஸ் டுகள் கட்சியுடன் இணைந்துள்ள முஸ்லிம் முக்தி மோர்ச்சா கூட்டத்தில் மாவோயிஸ்ட் தலைவர் பிரசாந்த் உரையாற்றுகையில், ''முஸ்லிம்களுக்கு சமஉரிமை வழங்கினால் மட்டும் போதாது; அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் சிறப்பு சலுகைகளும் வழங்கப் பட வேண்டும்'' என தெரிவித்தார். முஸ்லிம்களுக்கு ஆணையம் அமைக்கவும், முஸ்லிம்களின் புனிதத் தலங்களை சுற்றுலாத் தலங்களாக மேம்படுத்தப் போவதாகவும் பிரசாந்த் உறுதி அளித்துள்ளார். |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||