அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

ஜித்தா மண்டல தமுமுக பொதுக்குழு கூட்டம்

04-07-2008 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் ஜித்தா தலைவர் புதுமடம் இப்ராகிம் தலைமையில் சரபியா லக்கி தர்பார் ஹோட்டலில் ஜித்தா மண்டல தமுமுக பொதுக்குழு கூட்டம் சிறப்பாய் நடைபெற்றது.

 சிறப்பு அழைப்பாளராக கிழக்கு மண்டல துணைத் தலைவர் அலாவுதின் பாகவி அவர்கள் தமுமுகவின் இன்றைய அரசியல் நிலைபாடு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள். இம்தாதுல்லாஹ் ஜமாலி அவர்கள் தமுமுகவின் தாஃவா பணிகள் என்ற தலைப்பிலும்,சகோதரர் வரிசை முஹம்மது தமுமுகவின் அவசியம் ஏன்? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நிகழ்சியும் நடைபெற்றது உறுப்பிர்கள் கேள்விக்கு கிளை நிர்வாகிகள் பதில் அளித்தார்கள்.

100க்கும் அதிகமான உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.நிகழ்ச்சிக்கு பைசல்யாகிளை ருவைஸ் கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணி சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தார்கள்.நிகழ்ச்சியை தலைவர் தொகுத்து வழங்கினார்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.