|
அரக்கோணத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் தமுமுகவும் வேலூர் மாவட்ட கண் பார்வை
இழப்பு தடுப்பு சங்கமும், திருவண்ணாமலை ஸ்ரீ ரமண மகரிஷி கண்
மருத்தவமனையும் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமிற்கு மாவட்ட
துணைச் செயலாளர் க. முஹம்மது தலைமை தாங்க, நகர கிளை நிர்வாகிகள்
முன்னிலை வகிக்க, மாவட்டச் செயலாளர்
எ. அஸ்லாம் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இம்முகாமை நகர
காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் துவக்கி வைத்தார். இம்முகாமிற்கு 387
பேர் பயனடைந்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.

|