|
|
உக்கடத்தில் பள்ளி கட்டிட அடிக்கல் நடும் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் ஜி.எம்.நகர் தெற்கு உக்கடத்தில் அமைந்துள்ள தரீக்கத்துல்
இஸ்லாம் நர்ஸரி பிரைமரி ஸ்கூல் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
06.07.08 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்
நாடு வக்ப் வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி ் கலந்து கொண்டு புதிய
பள்ளிக்கூடத்திற்கான அடிக்கலை நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கோவை
மாநகர மேயர் ஆர். வெங்கடாச்சலம், மாநகராட்சி உறுப்பினர்கள், தமுமுக
மாவட்ட, கிளை நிர்வாகிகள், கோவை அத்தார் ஜமாஅத் தலைவர், கேரளா முஸ்லிம்
ஜமாஅத் தலைவர்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
|
|