|
கோவையில் கல்வி உதவிகள் வழங்கும்
நிகழ்ச்சி

கோவை அஞ்சுமனே நவ் நிஹாலானே இஸ்லாம் அறக்கட்டளை சார்பாக கோவை
மில்ரோட்டில் அமைந்துள்ள அஞ்சுமனே கட்டிடத்தில் 06.07.08 அன்று மாலை 5
மணியளவில் 250க்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவியருக்கு உதவித் தொகை
வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமுமுகவின் பொதுக்செயலாளர் செ. ஹைதர் அலி் கலந்து கொண்டு மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்
தொகைகளை வழங்கி சிறப்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் கோவை
டெக்சிட்டி கல்லூரி நிறுவனர் ஆடிட்டர் கலிமுதீன், தமுமுக மாவட்ட
நிர்வாகிகள், ஜமாத்தார்கள், மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின்
பெற்றோர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
|