![]() |
||
|
|
சிவகங்கையில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
இந்த பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. வி. ராஜசேகரன், சி.பி.எம். மாவட்டத் தலைவர் அர்ச்சுணன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் டி. குமார், முன்னாள் சேர்மன் சொ.லெ.சாத்தையா, இளைஞரணி நகரச் செயலாளர் ஆனந்த், இளையான்குடி சாலை ஜமாஅத் தலைவர் முகமது ஆரிப், சிவகங்கை ஜமாஅத் தலைவர்கள் முகமது இக்பால், முகமது மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர். ஹாஜி என்.எம். அப்துல் ரஜாக் குடும்பத்தைச் சேர்ந்த ஏ. இப்ராஹிம், தமுமுக பொதுச் செயலாளரும் வக்ப் வாரியத் தலைவருமான செ. ஹைதர் அலி அவர்களிடம் ஆம்புலன்சுக்கான சாவியைக் கொடுத்தார். இந்த சாவியை நகர நிர்வாகிகள் இப்ராஹிம், சையது நகீப் ஆகியோரிடம் தமுமுக பொதுச் செயலாளர் ஒப்படைத்தார். நிகழ்ச்சியின் முடிவில் நகர செயலாளர் டி.எஸ். சையது நசிப் நன்றி கூறினார். |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||