![]() |
||
|
|
அமர்நாத் நில விவகாரம்: கொந்தளிக்கும் காஷ்மீர்!!
பல ஆண்டுகளாக காஷ்மீர் மாநிலத்தில் போராடி வரும் பல்வேறு போராளி இயக்கங்களை ஒடுக்குவதற்கு ராணுவத்திற்கு பல கோடி ரூபாய்களை அரசு ஒதுக்கி வருகிறது. இருப்பினும் தீவிரவாதம் அங்கு ஒழிந்தபாடில்லை. அதே நேரத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவும் தீவிரவாதத்திற்கு இல்லை. குறிப்பாக பாகிஸ்தானிய ஆதரவு இயக்கங்களுக்கு அங்கே மக்கள் ஆதரவு குறைவாகவே உள்ளது. அந்த இந்திய நேசத்தை குலைக்கும் வேலை யைத்தான் சில குள்ளநரிகள் செய்து வருகின்றன. குறிப்பாக பாஜக ஆட்சியில் காஷ்மீர் முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்துத்துவா சக்திகளின் ஆதிக்கம் அங்கே வேரூன்ற பல்வேறு முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன. ஒருபடி மேலே போய் காஷ்மீரை ஜம்மு இந்துக்களுக்கு, காஷ்மீர் பள்ளத்தாக்கு முஸ்லிம்களுக்கு, லடாக் பகுதி புத்தர்களுக்கு என்று பாஜக பிரிவினைவாதத்தை தூண்டி மதவெறியை புகுத்தி அதில் வெற்றி(?) கண்டு வருகிறது. தற்போது சர்ச்சையாகி யுள்ள அமர்நாத் கோவில் யாத்திரையை பிரபலப்படுத் தியதும் ஆர்.எஸ்.எஸ் பாஜக வகையறாக்கள் தான். சகிப்புத் தன்மையும், மதப் பற்றும் கொண்ட காஷ்மீர் முஸ்லிம்களை அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் சங்பரிவார் குண்டர்கள் அவமதிப்பதும், தேவையற்ற கோஷங்களை போட்டுக் கொண்டு செல்வதும் வாடிக்கை. நம் ஊரில் நடக்கும் விநாயகர் சதுர்த்தியை போன்றுதான் அமர்நாத் யாத்திரையை இந்துத்துவா கும்பல் செய்து வருகிறது. வன்முறை கும்பலின் ஊர்வலமாக மாறிவிட்ட அமர்நாத் யாத்திரை அங்குள்ள போராளி இயக்கங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மை தான். ஒரு சில முறை தீவிர வாத இயக்கங் களால் அச்சுறுத்தல்கள் விடப்பட்டாலும் கோடிக்கணக் கான பணம் பாதுகாப்புக்கு என செவழிக்கப்பட்டு யாத்திரை தொடர்ந்து நடந்து வருகிறது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் நிலச் சரிவு ஏற்பட்டு யாத்திரைக்கு வந்தவர்கள் உயிருக்கு மன்றாடிய போது உதவியளித்தது உள்ளூர் முஸ்லிம்கள் தான். அமர்நாத், தேவஸ்தான அறக்கட்டளை என்று அழைக்கப்படக் கூடிய அமைப்பு 2000ல் ஏற்படுத்தப் பட்டது. இந்த அமைப்பின் தலைவராக காஷ்மீரின் ஆளுநரும் முன்னாள் லெப்டிணன்ட் ஜெனரலுமான சின்ஹா என்பவர் உள்ளார். பாஜக இந்த அறக்கட்டளைக்கு பின் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. ஒரு மாதம் மட்டுமே நடக்கக் கூடிய அமர்நாத் யாத்திரையை 90 நாட்களாக உயர்த்த இவ்வமைப்பு மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த, கடைசியில் 45 நாட்களாக யாத்திரை காலம் நீட்டிக்கப்பட்டது. 45 நாட்கள் பனி சரிவு, போராளிக் குழுக்களின் அச்சுறுத் தல்களுக்கு இடையில் மாநில அரசு ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பாதுகாப்பும், இட வசதிகளும் செய்து கொடுப்பது சாதாரண விஷயம் அல்ல. காஷ்மீரைப் பொறுத்த வரை ஆளுநருக்கும் ராணுவத்திற்கும் மட்டுமே முழுமையான அதிகாரங்கள் உள்ளன. காஷ்மீர் போராளி இயக்கங்களின் கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாவதும் இவர்கள் தான். மத்திய அரசு தனது திட்டங்களை ஆளுநர் மூலமாக காஷ்மீரில் செயல்படுத்தி வருகின்றது. இந்தியாவில் ஆளுநருக்குரிய உண்மையான அதிகாரம் காஷ்மீரில் மட்டும் தான் செயல்படுத்தப் படுகின்றது என்றால் அதில் மிகையில்லை. காஷ்மீரில் ஆளுநர் எனும் மத்திய அரசின் பிரதி நிதி முன் மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை தலையாட்டி பொம்மை களாகத்தான் இருக்க முடிந்திருக்கிறது. முஸ்லிம்கள்
பெரும்பான்மையாக வசிக்கும் காஷ்மீரின் ஆளுநர் இந்துக் கோவிலின் தலைவராக
இருப்பதும் கோவிலுக்காக மாநில அரசுக்கு நெருக்கடி தருவதும் காஷ்மீரில்
மட்டுமே நடக்கும் கூத்து. இந்நிலையில் அமர்நாத் கோயில் அறக்கட்டளைக்கு
40 ஹெக்டேர் வனத் துறைக்கு சொந்தமான நிலம் மாநில அரசால் ஒதுக்கப்பட்டது.
முழுக்க முஸ்லிம்கள் வாழும் பகுதியில் கோயி லுக்காக ஏக்கர் கணக்கில்
நிலம் ஒதுக்கப் படுவதை காஷ்மீர் இயக்கங்கள் இந்துத்துவ திணிப்பாக
கருதின. இதனால் போராட்டம் வெடித்தது. ஏற்கெனவே பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.,
குண்டர்களால் வெறி ஏற்றப்பட்ட பக்தர்களின் செயல் பாடுகளால் கடுப்பில்
இருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்கள் இந்த நில விவகாரத்தால்
கிளர்ந்து எழுந்தது. ஆளும் காங்கிரஸ் அரசு மக்களின் தொடர்
போராட்டங்களால் திணற ஆரம் பித்தது. துப்பாக்கி குண்டுகள் உயிர்களை
குடிக்க, லத்திகள் சுழல ஆரம்பித்தன. ஆனால் இவை எதுவுமே காஷ்மீரி களுக்கு
புதிதில்லை என்பதால் போராட்டத்தின் வேகம் இன்னும் கூடியது. துப்பாக்கி
சூடு நடக்கும், போராட்டம் நடத்திய கூட்டம் ஓடிவிடும். ஆனால் பத்து
நிமிடங்களில் மீண்டும் அதைவிட அதிகமான மக்கள் கூட்டம் கூடி விடுகிறது
என பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தை பற்றி எழுதுகின்றனர்.
இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் தாங்களாகவே திரண்டு போராட்
டக்களத்துக்கு வந்து நிற்பதும், துப்பாக்கிச் சூடுகளுக்கு,
தடியடிகளுக்கும் கலங்கா மல் கோஷமிடுவதும், பாலஸ்தீன எழுச்சி போராட்டத்தை
நினைவுப் படுத்துவதாக காஷ்மீர் இயக்க தலைவர் கள் வர்ணித்தனர். தொடர்ச்சியான மக்கள் போராட்டம் எங்கே அரசுக் கெதிராக மாறிவிடுமோ என பயந்த மத்திய அரசின் நெருக்கடியே மாநிலஅரசின் அறிவிப்புக்கு காரணம் என காஷ்மீர் இயக்கங்கள் கூறுகின்றன. காஷ்மீருக்கு சொந்தமான பல நூறு ஏக்கர் நிலங்களை ராணுவமும் பல்வேறு அரசு நிறுவனங்களும் ஆக்கிரமித்துள்ளதாக வும் அவைகளை மீட்கவும் போராட்டங் கள் தொடரும் என காஷ்மீரின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள கிலானி அறிவித்துள்ளார். எனினும் மாநில அரசு நில ஒதுக்கீடு வாபஸ் பெற்றதை திரும்ப பெற வேண் டும் என ஜம்முவில் தொடர்ந்து போராட் டத்தை நடத்தி இருகிறது. பாஜக உட்பட சங்பரிவார் அமைப்புகள். இந்திய அளவில் ஒரு நாள் ஒரு அடைப்புக்கு அழைப்பு விடுத்த பாஜகவின் கோரிக் கையை இந்திய மக்கள் புறக்கணித்தனர். காஷ்மீர் மக்களின் தனித்தன்மையை பாதிக்கும் எந்தவொரு செயலையும் அனுமதிக்க மாட்டோம் என காஷ்மீரிகள் கூறுகின் றனர். மக்கள் மனநிலையை ஆளும் அரசுகள் உணர வேண்டும். இல்லையென் றால் மக்கள் போராட்டத் துக்கு பணிய வேண்டியதிருக்கும். இதுதான் காஷ்மீர் போராட்டம் நமக்கு உணர்த்தும் சேதி. |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||