|
தமிழகச் சிறையில் வாழும் முஸ்லிம்
கைதிகள்:
விடுதலை எப்போது?
மனித உரிமைகள் மாண்பு பெறும் வேளை இது. புதைக்கப்பட்ட
உண்மை கள் மறுக்கப்பட்ட நியாயங்கள் அனைத்தும் வெளிச்சப்படுத்தப்பட்டு
வரும் காலம் இது. இத்தகைய கால கட்டத்தில் உரிமைகள் உரியவர் களுக்கு
வழங்கப்பட்டு வருகிறதா என்று ஆராயப் புகுந்தால் நம் இதயத்தை நொறுங்கச்
செய்யும் நிகழ்வுகளாய், சிறைவாசிகளின் பிரச்சி னைகள் அமைந்து விட்டன.
மனித நேயம் நாடுவோர் மன நிறைவற்று தவிக்கும் நிலையே நிலவுகிறது.
தமிழகச் சிறைகளில் இன்னமும் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளை
நினைத்துப் பார்த்தால் நம் இதயங் களை ஈட்டியால் குத்திக் குதறு வதைப்
போன்ற ஓர் உணர்வை அடைகிறோம்.
தமிழகச் சிறைகளில் 169 முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளனர்.
இவர்களுக்கு
-
பரோலில்
விடுதலை அளிப்பது.
-
உடல்
நலனை முன்னிட்டு
-
பிணை
வழங்குவது
-
பத்தாண்டு
தண்டனை முடிந்தவர்களுக்கு பொது மன்னிப்பு அளிப்பது.
-
தடா
கைதிகளுக்கு மறு பரிசீ லனை குழு அமைப்பது என அனைத்து வித
அம்சங்களிலும் முஸ்லிம் சிறை வாசிகள் புறக்கணிக்கப்பட்டு
வருகின்றனர்.
பல சிறைவாசிகள் பொதுவாக எந்த வகையிலும் சட்டங்களையும் மீறாத வர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. சிறைச் சாலைகளில் கூட இவர்களது கண்ணியம்
காக்கப்பட்டதா? ஏற்றத் தாழ்வுகள் கடைப் பிடிக்கப்பட்டதா? என்றால்
அதுவும் கேள்விக் குறியே.
இன்று தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் 76 பேர்.
விசாரணை முடியாத நிலையில் 126 பேரும் 10 ஆண்டுகளாக சிறையில்
நிர்க்கதியாக வாழ்ந்து வருகின்றனர்.
ஒருவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் அவருக்கு பிணை யில்
செல்வதற்கு உரிய உரிமையை சட்டம் வழங்குகிறது. தடா போன்ற கொடிய
சட்டத்தின் கீழ் நசுக்கப் பட்டவர்களுக்கு பிணையில் செல்ல உரிமை
உண்டு. முஸ்லிம்களுக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவது ஒரு
கட்டாய சட்டமாகவே மாறி விட்டது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரணை கைதிகள் என்ற பெயரில் கடந்த
9 ஆண்டுகளாக 166 முஸ்லிம் சிறைவாசிகள் பிணை வழங்கப்படாமல் இருந்தனர்.
இவர்கள் கீழ்நீதிமன்றம், உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம்
ஆகியவற்றில் பிணை வேண்டி மனு தாக்கல் செய்த போதும் இவர்களது குறைகள்
நிவர்த்தி செய்யப்படவே இல்லை.
குணங்குடி அனிபா போன்றோர் பிணை கூட மறுக்கப்பட்டு சிறையில் வாடி
வருகிறார்கள்.
முஸ்லிம் சிறைவாசிகள் தங்கள் மீது சுமத்தப் பட்டுள்ள
குற்றச்சாட்டுகளை நியாயமான முறையில் எதிர் கொண்டு வாதம் புரிய
ஏதுவாக பிணை வழங்கி வாய்ப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் அந்த
உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது.
இவர்கள் முஸ்லிம்கள் என்பதற் காகவே இவ்வாறு உரிமை மறுக்கப்
பட்டவர்களாக வாடுகிறார்கள் என் பதை மறுப்பதற்கில்லை.
கோவில் நிர்வாகியை படுகொலை செய்த வழக்கில் குற்றவாளி காஞ்சி
சங்கரச்சாரி முதல் பலரது நிலை இன்று ஜாமீன் வழங்கப்பட்டு சுகவாசி
களாக மாறும் நிலை.
முஸ்லிம்கள் மட்டும் சிறைவாசிகள் சிறைவாசிகளாகவே தொடரும் துயர நிலை.
முஸ்லிம் அல்லாதவர்கள் சிறை வாசிகளாக இருக்க வேண்டியவர்கள்,
சுகவாசிகளாகவே வாழும்நிலை.
இது இவர் ஆட்சி, அவர் ஆட்சி என்று எவர் ஆட்சி என்றாலும் இந் நிலையே
தொடருகிறது. முஸ்லிம்கள் மீது காட்டப்படும் பாரபட்சம் அளவிட
முடியாததாகவே கருதப்படுகிறது.
இத்தகையவர்களின் மனப்பாங்கு கடந்த 10 ஆண்டுகளாகத் தான் மோசமான
நிலையை அடைந்துள்ளது இந்நிலை மாறவேண்டும்.
14 வழக்குகளில் நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டவர்கள் குறைந்த
பட்சம் 4 ஆண்டுகளையும் அதிக பட்சம் 9 ஆண்டுகளையும் சிறையில் அனுப
வித்த அவல நிலைக்கு யார் பொறுப் பேற்பது?
முஸ்லிம் கைதிகளுக்கு இழைக்கப் பட்ட அநீதிகளுக்கு தீர்வுகாண (இப்போ
தாவது) ஒரு வழி பிறந்திருக்கிறது.
எதிர் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள்
அன்று எட்டு ஆண்டுகள் முடிந்த கைதிகளை முன்கூட்டி விடுதலை செய்து
விட ஏதுவாக தமிழக அரசு முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது.
எட்டு ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசி
களையும் விடுவித்திட சிறப்பு ஆணைப் பிறப்பிக்க வேண்டும்.
உரிமைகள் மறுக்கப்படுவது கொடுமை. அதிலும் எல்லோருக்கும்
வழங்கப்படும் உரிமைகள் மறுக்கப் படுவது சற்றும் பொறுமை காட்ட
முடியாத அவசர அவசிய கோரிக்கையாகும்.
முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக் கைகளில் சிறிதும் சமரசம் காட்டாமல்
போராடி வரும் தமுமுக முஸ்லிம் சிறைவாசிகளுக்கு உரிய தீர்வு காண
வேண்டும் என விரும்புகிறது.
முஸ்லிம் சிறைவாசிகள் காராக்கிரகத் தில் தவிக்கும் நிலையை கருணை
அடிப்படையில் அணுகி எட்டாண்டு கள் சிறையில் வாடும் கைதிகளை விடுதலை
செய்ய முடிவெடுத்ததில் முஸ்லிம் சிறைவாசிகளையும் இணைத்து கொண்டு
சமநீதி காட்டுமாறு கேட்கிறோம். பாரபட்ச வரலாற்றின் கறுப்பு
பக்கங்களுக்கு வெள்ளையடிக்கும் நீதியை நிலை நாட்டுங்கள்.
|