அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு வந்த வாகனங்கள்

 விபத்து தமுமுக உதவி
-சமத்துவன்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மணி விழா மாநாட்டில் பங்கு கொள்ள வந்தவர்களின் ஆறு வாகனங்கள் ஒன்றொடொன்று அடுத்தடுத்து மோதி விபத்திற்குள்ளானது.

திருவண்ணாமலை மாவட்ட முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்டத் தலைவர் பீர் முஹம்மது தலைமையில் வந்தவாசியில் இருந்து மேல் மருவத்தூர் வழியாக சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது மதுராந்தகம் பைபாஸ் சாலையில் சாலை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது ஒரு கார் மோதாமல் இருக்க திடீர் என நிறுத்தியுள்ளார். இதனால் கார் சாலையை மறித்து நின்றது. காரின் பின்னால் வந்த முஸ்லிம் லீக் மாநாட்டுக்கு செல்ல வந்தவர்களின் 6 வேன்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியது. இதில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்களின் ஒருவரான அப்துல் வாஹித் தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் ஹமீது அவர்களிடம் விபத்து நடந்து பலர் காயமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.

இதையடுத்து அப்துல் ஹமீது, தமுமுக மதுராந்தகம் நகரப் பொருளாளர் சாதிக் பாஷா, செயலாளர் முஸ்தபா, துணை செயலாளர் கலீல் ரஹ்மான் ஆகியோருக்கு விபத்து நடந்த தகவலை கூறி அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

மதுராந்தகம் நகர தமுமுகவினர் அவசர சிகிச்சை ஊர்தியுடன் விபத்து நடந்த இடத்திற்கு சில நிமிடங்களிலேயே வந்தனர்.

இதையடுத்து காயம் அடைந்த 15 பேருக்கு மேற்பட்டோரை மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் சேர்த்து அவர்களுக்கான சிகிச்சையை அளிக்க ஏற்பாடு செய்தனர்.

முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் பீர் முஹம்மது குடும்பத்தினர் 5பேர் உட்பட 63 நபர்கள் படுகாயம் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமுமுக மாநில செயற்குழு உறுப்பினர் அப்துல் ஹமீது, காஞ்சி மாவட்ட துணைத் தலைவர் யூனுஸ், மாவட்ட துணைச் செயலாளர் அச்சிறுபாக்கம் ஷாஜஹான், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஜமால், மாணவரணி ரபீக் ஆகியோர் காயமடைந்தோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் மருத்துவ அதிகாரிகளிம் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டனர்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.