|
|
சவுதி அரேபியா மத்திய மண்டலம்
புரைதாவில் மார்க்க விளக்க மாநாடு

சவுதி அரேபியா அல்கஸிம் மாகாணம்
புரைதாவில் கடந்த ஜுன் 26ம் தேதி வியாழக்கிழமை இஷாவுக்குப்பின் மார்க்க
விளக்க மாநாடு வல்ல இறைவனின் பேரருளால் சிறப்பாக நடந்தது. தலைமை அழைப்பு
மையமும் நகர தமிழ் தஃவா கமிட்டியும் இணைந்து நடத்திய இம்மாநாட்டில் சகோ
பிர்னாஸ் அஹ்மத் இறைவசனம் ஓத மௌலவி பஃஆத் விளக்கவுரை தந்தார். இலங்கையை
சேர்ந்த சகோ அப்துல் காதர் அனைவரையும் வரவேற்றார். புரைதா தலைமை அழைப்பு
மையத்தின் அழைப்பாளர் மௌலவி சக்கீன் இஹ்ஸானி தலைமையேற்று முஸ்லீம்களின்
ஒற்றுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்.

மௌலவி முஹம்மது மக்தூம், சகோ குர்ஷித் ஆகியோர் உரை நிகத்தியதை தொடர்ந்து
மாற்றுமத சகோதரர் ஒருவர் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக்கொண்டு முஹம்மது
அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அவருக்கு தமிழ் தஃவா கமிட்டி சார்பில்
சகோ பிலால் அஹமது நினைவு பரிசு வழங்கினார்.
கிழக்கு மண்டலம் தம்மாம் அல்கோபார் அழைப்பு மையத்தின் அழைப்பாளர்
ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் இறைநம்பிக்கையும் நற்செயல்களும் என்ற
தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்புரையில் கூறப்பட்ட
செய்திகளை மையமாகக்கொண்டு கேள்விகள் கேட்கப்பட்டன. சரியாக பதில்
கூறியவர்களுக்கு புரைதா தமிழ் தஃவா கமிட்டியின் சார்பில் உம்ரா சென்று
வர பேருந்து பயணச் சீட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன.

பிந்திய இரவுவரை தொடர்ந்த இம்மாநாட்டிற்கு உனைஸா, கப்ரா, செனையா, மஆரத்,
ரியாதல்கப்ரா மற்றும் அல்கஸிம் மாகாணத்தின் அனைத்துப்
பகுதிகளிலிருந்தும் திரளாக சகோதரர்கள் கலந்துக்கொண்டனர். சகோ அபுதாஹீர்
தொகுத்து வழங்கிய இம்மாநாட்டின் இறுதியில் தஃவா கமிட்டி தலைவர் சுல்தான்
அப்துல் காதர் நன்றி கூறினார்.
வாகனம், அரங்கம், உணவு, சிறப்பு அழைப்பாளர்கள் வருகை என அனைத்து
ஏற்பாடுகளையும் அபுபக்கர் சலீம், சாதிக், முஹம்மது கனி, அபுபக்கர்,
அப்துர்ரஹ்மான், மெய்தீன், துல்பக்கர் அலி உள்ளிட்ட தமிழ் தஃவா
கமிட்டியை சேர்ந்த சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். கலந்துக்கொண்ட
சகோரர்கள் அனைவரும் இம்மாநாட்டை சிறப்பித்ததோடு நல்ல பயனும் பெற்றனர்.
|
|
|