![]() |
|||
|
|
தரமணியில் கல்வி உதவி
தென்சென்னை மாவட்டம் தரமணி கிளை தமுமுக சார்பாக கடந்த 22.06.2008 அன்று சுமார் 100 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் பொறியியல் கல்லூரி மாணவி ரஜியா பேகத்திற்கு கல்வி நிதியாக ரூ.10,000/- வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை தரமணி மஸ்ஜிதே அல்லாஹ் பள்ளி இமாம் மவ்லவி நூர்தீன் குர்ஆன் வசனம் ஓதி துவக்கி வைத்தார். கிளைத் தலைவர் முஹம்மது ரஃபீக் நிகழ்ச்சிக்கு தலைமையேற்க, கிளை பொருளாளர் வரவேற்புரையாற்றினார். செயலாளர் ஷரீஃப் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஹனிபா, மாவட்டப் பொருளாளர் அப்துஸ் ஸலாம், மாவட்ட துணைத் தலைவர் கவுதலி, மயிலை பகுதி தலைவர் ஜாகிர் உசேன், பகுதி பொருளாளர் ஜாகிர், ஆகியோர் இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்கள். மாநிலப் பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல் லாஹ் அவர்கள் 'இஸ்லாத்தில் கல்வியின் முக்கியத்துவம்' பற்றி உரையாற்றி மாணவி ரஜியாவுக்கு கல்வி உதவி வழங்கினார். கிளை துணைத் தலைவர் இக்பால் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். |
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
|||