அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

ஈரோட்டில் தமுமுகவின் 41வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


தமுமுகவின் 41வது ஆம்புலன்ஸ் ஈரோடு மாவட்டம் பெரிய
அக்ரஹாரத்தில் அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. கடந்த 18.6.08 அன்று மாவட்டச் செயலாளர் முஹம்மது ரிஸ்வான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமுமுக தலைவர் டாக்டர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் காஞ்சி அப்துஸ் ஸமது, மருத்துவ சேவை அணிச் செயலாளர் எம்.எம்.பாஷா, மாவட்டத் தலைவர் சையத் அஹ்மத் பாரூக் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார் கள். சகோ. கே.கே.எஸ்.கே. ஹைதர் அலி, கே.கே.எஸ்.கே. ரபீக், டாக்டர் கே.எம். அபுல் ஹசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமுமுக விரைவில் புதிய அரசியல் கட்சியைத் துவக்க உள்ளது. மற்ற கட்சி களிலிருந்து இது வேறுபட்ட கட்சியாகவும், இதில் இருப்பவர்கள் மாறுபட்ட அரசியல்வாதிகளாகவும் இருப்பார்கள். இங்கு தூய்மையான மக்கள் சேவை மட்டுமே பிரதானமாக இருக்கும் என்று கூறிய தமுமுக தலைவர் ஜவாஹிருல் லாஹ், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மிஸ்ரா ஆணைய அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்ய காங்கிரஸ் கட்சி தயங்குகிறது, இதுகுறித்து தோழமைக் கட்சிகளில் உள்ள முஸ்லிம் எம்.பி.க்களும் கேள்வி கேட்கவில்லை, மிஸ்ரா அறிக்கையைத் தாக்கல் செய்யா விட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு தமுமுக ஆதரவளிக்காது என்றார்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.