![]() |
|||
|
|
கிளியூர் கிராமத்தில் கல்வி உதவி
இந்த நிகழ்ச்சிக்கு நயினார் கோவில் ஒன்றியப் பெருந்தலைவர் சுப. த. திவாகர் மற்றும் நயினார் கோவில் காவல்துறை ஆய்வாளர் அழகு, தொழுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற செல்வி என்கிற மாணவிக்கு தமுமுக சார்பில் தங்கப் பதக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கிளியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு கேடயம் வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழு வதையும் ரியாஸ், ஹபிபுல்லாஹ், தீன் மகாதிர், மதார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். |
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
|||