![]() |
|||
|
|
இராயபுரத்தில் கல்வி உதவி
வடசென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி தமுமுக கிளையின் சார்பில் கடந்த 14ந் தேதி அன்று மாநில துணைச் செயலாளர் ஹாருன் ரஷீது தலைமையில் கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 25 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கல்வி உதவி வழங்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் பி.எஸ். ஹமீது, மாவட்டச் செயலாளர் உஸ்மான், இராய புரம் பகுதி தலைவர் எஸ்.கே. அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். |
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
|||