அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

நெல்லிக்குப்பத்தில் கல்வி உதவி

கடலூர் மாவட்டம் நெல்லிக் குப்பத்தில் நகர தமுமுக மற்றும் இஸ்லாமிய சேவை அமைப்பு இணைந்து இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி 09.06.2008 அன்று நடைபெற்றது. இதில் ஏழை மாணவ மாணவிகள் 150 பேருக்கு இலவச நோட்டுக்கள் வழங்கப் பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். இஸ்லாமிய சேவை அமைப்பின் பொறுப்பாளர் ஹாஜா நஜிமுத்தீன் மாணவர் களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் முகம்மது உசேன், நகரச் செயலாளர் அசரப் அலி, மருத்துவ சேவை அணி செயலாளர் சரப்தீன் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.