![]() |
||
|
|
ஈராக்கில் அதிகமான உயிர்பலிகள்
ஈராக் சுகாதாரத்துறை அமைச்சகம் வழங்கியுள்ள புள்ளிவிவரத்தின்படி 968 அப்பாவி மக்கள் ஏப்ரல் மாதத்தில் மட்டும் படுகொலை செய்யப்பட்டுள் ளனர். அமெரிக்கப் படையினரும் அமெரிக்க ஆதரவு பெற்ற ஈராக் அரசுப் படையினரும் இந்தப் படுகொலைகளை நிகழ்த்தியுள்ளனர். முக்ததா அல் சதரின் அல் மஹ்தி அதிரடிப்படையினரின் மேலுள்ள ஆத்திரத்தில் அப்பாவிகளை அமெரிக்க ராணுவம் கொன்று தீர்ப்பதாக வளைகுடா ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 49 அமெரிக்க ராணுவத்தினர் ஈராக் போர் முனையில் பலியாகியுள்ளனர். இதுவும் கடந்த ஆண்டைவிட மிக அதிகமான உயிர்பலி என சி.என்.என் செய்தி நிறுவனம் குறிப்பிடுகிறது. அல்சதர் நகரில் இருக்கும் இரண்டு மருத்துவமனைகள் போதிய சிகிச்சை வசதியின்றி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில் படுகாயம டைந்த 2400 பேர் சதர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 421 பேரை சடலமாக அந்த மருத்துவமனை திருப்பியனுப்பியது. இதனிடையே அமெரிக்கப்படையின் தாக்குதலில் அல்சதர் மருத்துவமனை கடுமையாக சேதமடைந்தது. அமெரிக்கப் படைகளின் இந்தச் செயலைக் கண்டித்து ஈராக்கில் மக்கள் பெரும் போராட்டத்தில் இறங்கினர். ஈராக் போர் முனையில் பலியாகும் அமெரிக்க போர்வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து அமெரிக் காவிலும் அதிபர் புஷ்ஷுக்கு எதிரான போராட்டங்கள் வலுபெற்று வருகின்றன. வெள்ளை மாளிகை முன்பு ஏராள மான அமெரிக்க மக்கள் அணி திரண்டு போராட்டம் நடத்தினர். இதனிடையே வரலாற்றிலேயே மிக மோசமான, செல்வாக்கில்லாத அதிபர் என ஜார்ஜ் புஷ்ஷை சர்வதேச கருத்துக் கணிப்பு ஒன்று குறிப்பிடுகிறது. |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||