![]() |
||
|
|
வந்தார்! வென்றார்!! சென்றார்!!! ( ஈரான் அதிபர் இந்திய வருகை)
இந்தியா-ஈரானுக்கு இடையேயான குழாய் வழி எரிவாயு இணைப்புத் திட்ட ஒப்பந்தம் இன்னும் 45 நாட்களில் நிறை வேற்றப்படும் என ஈரான் அதிபர் அறிவித்தார். இந்த அறிவிப்பு ஈரானுக் கும் இந்தியாவிற்குமான சரித்திர சிறப்புமிக்க உறவை மேலும் வலுப்படுத்து வதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயலுவதாக குற்றம் சாட்டி அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டன. அத்தோடு ஐக்கிய நாடுகள் அவையின் மீது கொண்டு வரப்பட்ட ஈரானுக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா இரண்டு முறையும் அமெரிக்கா வுக்கு ஆதரவாக ஈரானுக்கு எதிராகவே வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானுடனான எரிவாயு குழாய் திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த நட்வர்சிங் ஓரங்கட்டப்பட்டார். பெட்ரோ லியத்துறை அமைச்சர் மணிசங்கர் ஐயரின் இலாகா மாற்றப்பட்டது. அமெரிக் காவின் எண்ணப்படியே இவையெல்லாம் நடந்ததாக அப்போது கூறப்பட்டது. எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஈரான் அதிபரின் இந்திய விஜயம் அமைந்துள்ளது. ஈரான், பாகிஸ்தான், இந்தியாவுடனான எரிவாயு குழாய் இணைப்புத் திட்டம் மூன்று நாடுகளுக்கும் மிகவும் பலனளிக்கும் விதத்தில் அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது விஷயத்தில் மறைமுக அழுத்தம் கொடுத்த அமெரிக்காவின் கருத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளால் முதன்முறையாக புறக்கணிக் கப்பட்டுள்ளது என்பது வியப்புக்குரிய செய்தியாகும். உலக அளவில் அமெரிக்காவின் அரசியல் செல்வாக்கு இறங்கு முகத்தில் இருப்பது மட்டும் காரணமல்ல அதன் பொருளாதார பின்னடைவும் டாலர் வீழ்ச்சியும் கூட அமெரிக்காவின் குரல் எடுபடாமல் போனதற்கு முக்கிய கார ணமாக இருக்கக் கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||