![]() |
||
|
|
குழந்தைகள் மாற்றமும், மரபணு சோதனையும் ராமேஸ்வரம் ராஃபி சென்னை ராயபுரம் சிமென்ட்ரி சாலையில் உள்ள ஆர்எஸ்ஆர்எம் அரசு மகப்பேறு மருத்துவமனையில், கடந்த மாதம் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அன்சாரி என்பவரின் மனைவி பரக்கத் பேகம் (25) தலைப்பிரசவத்துக்காக சேர்க்கப்பட்டார்.
அதேபோல் திருவொற்றியூரைச் சேர்ந்த
இளங்கோ என்பவரின் மனைவி காமாட்சியும் (23) தலைப்பிரசவத்துக்காக
சேர்க்கப்பட்டிருந்தார். இருவருக்கும் ஒரே நேரத்தில் மாலை 4.50 மணிக்கு
ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்தது. காமாட்சியிடம் ஆண் குழந்தையையும்,
பரக்கத் பேகத்திடம் பெண் குழந்தையையும் மருத்துவமனை ஊழியர்கள்
கொடுத்தனர். பின்னர் குழந்தைகளின் எடையை பார்க்க, இரவு 9 மணிக்கு
மருத்துவமனை ஊழியர்கள் எடுத்துச் சென்றனர். அப் போது டாக்டர் ஒருவர்,
பரக்கத் பேகத்துக்கு பிறந்தது ஆண் குழந்தை. ஏன் மாற்றிக் கொடுத்தீர்கள்?
என்று மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டார். பின்னர் மருத்துவமனை
ஊழியர்கள் குழந்தை களை எடை பார்த்த பின், பெண் குழந் தையை
காமாட்சியிடமும், ஆண் குழந் தையை பரக்கத் பேகத்திடமும் கொடுத்தனர். காமாட்சிக்கு ஆண் குழந்தைதான் பிறந்தது என்று அவரது உறவினர்கள் திட்டவட்டமாக கூறியதால், இருதரப் பினரையும் சமாதானப்படுத்திய போலீசார், டாக்டர்கள் வந்தபிறகு விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கலாம் என்று கூறினர். இதனால் 2 குழந்தைகளும் மருத்துவமனையிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்நிலையில், ஸ்டான் மருத்துவ மனை டீன் மைதி, ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஹெப்சிபா, நிலைய மருத்துவ அலுவலர் எசபெத் ராணி உள்ளிட்டோர் மறுநாள் காலை விசாரணை நடத்தினர். ஆபரே ஷன் செய்த டாக்டர்கள், உடனிருந்த நர்ஸ்கள், ஊழியர்கள், மற்றும் குழந் தைகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், குழந்தைகளுக்கு டோக்கன் மாற்றிக் கட்டியதால்தான் இந்தக் குழப்பம் நேர்ந்தது என்றும், உண்மையில் ஆண் குழந்தை பரக்கத் பேகத்துக்கும் பெண் குழந்தை காமாட்சிக்கும் பிறந்தது என்றும் டாக்டர்கள் கூறினர். அதை ஏற்க மறுத்த காமாட்சியின் கணவரும், உறவினர்க ளும், எங்களுடையது ஆண் குழந்தை தான். ஊழியர்கள் மறைக்கின்றனர் என்று கூறி, மருத்துவமனைக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாய்க்கும், குழந்தைக்கும் டோக்கன்
மாற்றி கட்டியதால் தான் இந்த குழப்பம் ஏற்பட்டது. அதனால் குழந்தையை
ஏற்க இரு தரப்பினரும் மறுக்கின்றனர். பெற்றோர்களின் சந்தேகத்தை தீர்க்க
மரபணு சோதனை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. பெற்றோர்களின் மரபணு பரிசோதனை முடிவின்படி சையத் அன்சாரிலிபரக்கத் பேகம் ஆகியோருக்கு பிறந்தது ஆண் குழந்தை என்றும், இளங்கோவன்லி காமாட்சி ஆகியோருக்கு பிறந்தது பெண் குழந்தை என்றும் நீதிபதிகள் அறிவிக்க, குழந்தைகள் உரிய பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாறிப் போன குழந்தைகள் யாருடையது என்று தீர்மானிக்கும் வரை இரண்டு தாய்மார்களிடம் இருந்து பால் சேகரிக்கப்பட்டு குழந்தைகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் வழங்கியிருக்கிறது. இதில் பிறந்தது இரண்டும் ஆண் குழந்தைகள் என்றிருந்தாலோ அல்லது பிறந்தது இரண்டும் பெண் குழந்தைகள் என்றிருந்தாலோ கூட பிரச்சினை வெளியே கசிந்திருக்காது. ஆனால் ஆண் குழந்தை ஒன்று பெண் குழந்தை ஒன்று என்பதால், இந்தச் சமூகத்தில் ஆண் குழந்தைகளையே பெரிய சொத்துக்களாக பெற்றோர்கள் கருதி வருவதால் இளங்கோவன்-காமாட்சி தம்பதியினர் பெண் குழந்தையை வாங்க மறுத்திருந்தனர். மருத்துவ ஊழியர்களின் பொறுப்பற்றத் தன்மையால் நிகழும் சம்பவங்கள் ஏராளம், இந்த நேரத்தில் அரசு மருத்துவமனை செவிலியர்களின் கவனக்குறைவால் இந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பல மணி நேரங்களில் இரண்டு குழந்தைகளின் பெற்றோர்களின் மனம் எவ்வளவு பெரிய குழப்பத்திற்கும், துன்பத்திற்கும் உள்ளாகி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். இது போன்ற குழப்பங்கள் பல நேரம் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியில் உயிர் இழப்பைக் கூட ஏற்படுத்திவிடும். இதுபோன்ற குழப்பங்கள் நிகழாமல் அரசு மருத்துவமனையில் புதிய நுட்பங்களை புகுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||