அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

பாபர் மசூதியை இடித்தது விழிப்புணர்வை ஏற்படுத்தியதா?
வி.என்.முகம்மது உசேன்.
கடந்த சில வாரங்களுக்கு முன் 'இந்தியா டுடே' என்ற பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த எல்.கே.அத்வானி, கீழ்கண்டவாறு கூறியுள்ளார். 'இந்துக்கள் காலமெல்லாம் ஜாதி, பிராந்திய மொழி வேறுபாடுகளில் உழல வேண்டுமா? இல்லை அவர்களது அடிப்படை நம்பிக்கை மற்றும் தேசியவாதத்திற்கு ஏற்படும் சவால் களைச் சமாளிக்க ஒன்று சேர வேண் டுமா? டிசம்பர் 6, 1992 சம்பவம் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஏற்றுக் கொள் ளும் விதத்தில் பதிலளித்தது என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் அது இந்து விழிப்புணர் வுக்கு வித்திட்டது என்று சொல் வேன் என்கிறார். பாபர் மசூதியை இடித்த கரசேவகர்கள் இந்திய வரலாற்றின் முக்கியமான கேள்வி களுக்கு தங்கள் பாணியில் பதில ளித்தார்கள் என்கிறார் அத்வானி.

அத்வானி கூறுவது போல் இந்துக்களிடையே உள்ள வேறு பாடுகளுக்கு யார் காரணம்? இந்த வேறு பாடுகளை நீக்குவதற்கான வழிவகைகள் என்ன? 400 ஆண்டுகளுக்கு மேலாக முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வந்த சிறப்பு வாய்ந்த மசூதியை இடிப்பதன் மூலம் இந்து விழிப்புணர்வை ஏற்படுத் தியதா? துவேச உணர்வுகளை உண்டு பண்ணி அதன் வாயிலாக அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தால், அதன் பின் விளைவுகள் என்ன? இந்த வினாக்க ளுக்கு விடை காணுவதே இந்த கட்டுரை யின் நோக்கம்.
மொழி வேறுபாடு :
இந்துக்கள் மொழியால் வேறுபாடு அடைவதற்கு பா.ஜ.கவே சில காலங் களில் காரணமாகி விடுகின்றது. ஒகேனக்க லுக்கு மேற்கு கர்நாடகப் பகுதியில் வாழ் பவர்கள் கன்னட மொழி பேசும் இந்துக் கள். ஒகேனக்கலுக்கு கிழக்குப் பகுதியில் உள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதிகள், முத்துப்பேட்டை, வாணியம்பாடி போன்று முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகள் அல்ல. மிகுதமானோர் தமிழ் பேசும் இந்துக்கள் உள்ள நகரங்கள். இந்த நகரங் களுக்கு உதவும் குடிநீர்த் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் முத­ல் நின்றவர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பா.ஜ.கவினர். சில நாட்கள் கர்நாடகத்தில் முதலமைச்சராக இருந்த எடியூரப்பா. மதத்தால் ஒன்று படாமல், மொழியால் வேறுபாடு உண்டு பண்ணியவர்கள் பா.ஜ.க வினர்.
பிராந்திய வேறுபாடு;

இந்துத்துவா கட்சிகள் எப்படி பிராந் திய வேறுபாடுகளை உண்டு பண்ணுகிறது என்பதற்கு ஒரு நல்ல உதாரணத்தை எடுத் துக் காட்டலாம். மஹாராஸ்டிர மாநிலத்தில் உள்ள மஹாராஸ்டிர நிர்மான்சேனா என்ற கட்சி சிவசேனாவில் இருந்து பிரிந்து சென்ற கட்சி. பால்தாக்கரே அண்ணன் மகன் நடத்தும் இந்துத்துவா கட்சி. இதன் தலைவர் ராஜ்தாக்கரே மகாராஸ்டிராவில், வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தனி யார் நிறுவனங்களில் வேலைக்கு வைக்கக் கூடாது என்று கலவரம் செய்கிறார். உ.பி, பீஹார் போன்ற மாநிலங்களி­ருந்து வந்துள்ள ஏழ்மையான இந்துக்கள் தான் மகராஷ்டிராவில் அதிகமாக வேலை செய் கின்றனர். இங்கு ஏன் மத ஒற்றுமையை உண்டு பண்ணாமல், இந்து மதத்தினரி டையே பிராந்திய வேறுபாடுகளை உண்டு பண்ணுகின்றார் ராஜ் தாக்கரே. இந்து மதத்தினர் இடையே வேறுபாடு இருக்கின்றதே என்று வருத்தப்படும் அத்வானி, ராஜ்தாக்கரேயின் குறுகிய மனப்பான்மையை தடுத்து நிறுத்த ஏன் முன் வரவில்லை?

ஜாதி வேறுபாடு :

மற்ற மதங்களை விட இந்து மதத்தில் ஜாதி வேறுபாடுகள் நிலவுவதைக் காண முடிகிறது. பிறப்பி­ருந்து இறப்பு வரை மணமக்களை தேர்ந்து எடுப்பது முதல், இறந்தவுடன் பிணத்தை எரிக்கும் வரை, சுடுகாட்டில் கூட ஜாதிக்கொரு எரி மேடை காணப்படுகிறது. த­த் மக்களை இந்துக்கள் என்று கணக்கெடுப்பில் மட்டும் சேர்த்துக் கொண்டு, இன்னும் தீண் டாமையை வளர்த்து வருகின்றனர். இந்துத்துவா கட்சிகள் தங்கள் மதத்தில் உள்ள ஜாதிப் பிரிவினையை ஒழிக்க ஏதாவது முயற்சி எடுத்து வருகின்றனரா? ஆயிரமாயிரம் அத்வானிகள், ராஜ்நாத் சிங்குகள் இந்து மதத்தில் தோன்றினாலும், இந்து மதத்தில் உள்ள ஜாதி வேறுபாடு களை ஒழிக்க முயற்சிக்க மாட்டார்கள். இன்னுமொரு ஈ.வே.ரா பிறக்க வேண்டும்.

விழிப்புணர்வு :

பாபர் மசூதியை இடித்தது இந்து மக்க ளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்கிறார் அத்வானி. 'விழிப்புணர்வு' என்ற வார்த்தை தூங்கிக்கிடக்கும் ஒரு சமுதாயத்தை தட்டி எழுப்புவதற்கு பயன் பட்டு வருகிறது. மொழி, பிராந்தியம், ஜாதி இவைகளால் வேறுபட்டிருக்கும் ஒரு மதத்தினரை தட்டி எழுப்ப, மாற்று மதத் தினரின் வணக்கஸ்தலத்தை இடிப்பது ஒரு சரியான வழிமுறையாகுமா? பாபர் மசூதியை இடித்து அதன் பின் ஏற்பட்ட மதக்கலவரங்களால் எவ்வளவு உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன? ஒரு மதத்திலே உள்ள வேறுபாடுகள் மூடநம்பிக்கை களை போக்க வேறு வழிவகைகள் இல்லையா?

இங்கு தமுமுகவையே ஒரு முன்மாதிரி யாக எடுத்துக் கொள்ளலாம். அதன் தலைவர்கள் இஸ்லாமிய மதத்தினரிடையே உள்ள வேறுபாடுகளை நீக்கி, முஸ்லிம் களை நல்வழியில் நடத்திச் செல்ல மார்க்க சொற்பொழிவுகள் நடத்துகின்றனர். இதே போன்று சங்பரி வார் இயக்கங்கள், இந்து மக்களை சரியான வழியில் நடத்திச் செல்ல மத உபன் யாசங்கள் நடத்தினால் தவறில்லை. வன் முறையில் ஈடுபட செய்தால் தான் அது சட்ட விரோதமாகும். பாபர் மசூதியை இடித்தது இந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்கிறார் அத்வானி, இது தற்கா­கமானது தான். விழிப்புணர்வை ஏற்படுத்திய உ.பி.யில் இன்று பா.ஜ.க வின் நிலைமை என்ன? மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது.

சலுகைகள் நீக்கப்படும் :

இந்து மதத்திலுள்ள வேறுபாடுகளை நேர்வழியில் சென்று நீக்குவதைத் தவிர்த்து, முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டால் இந்துக்களை ஒற்றுமைப்படுத்தி ஆதரவை பெற்று விட லாம் என்ற எண்ணத்தில் செயல்படுவது தான் இந்துத்துவா கட்சிகளின் பழக்கம். இதன் தொடர்ச்சி தான் சில நாட்களுக்கு முன்பாக பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங், ஐக்கிய முண்ணனி அரசு, சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அளித்துவரும் சலுகை கள், பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்தால், இந்த சலுகைகளை எல்லாம் நீக்கிவிடும் என்று அறிக்கை விட்டார்.

உண்மையில் மத்தியில் ஆளும் ஐக்கிய முன்னணி அரசு முஸ்லிம்களுக்கு உரிய சலுகைகளை இன்னும் அளிக்க வில்லை. சச்சார் கமிட்டி பரிந்துரை அளித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும், மத்திய அரசாங்கப் பணிகளில் முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு பெரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை பா.ஜ.க.வின் எதிர் தாக்குதலுக்கு மத்தியஅரசு பயப்படுகிறது.
முஸ்லிம்களுக்கு சலுகை :

காங்கிரஸ் அல்லாத அரசியல் கட்சி கள் ஆட்சிக்கு வந்தால் அவைகள் துணிச்சலாக முஸ்லிம் களுக்கு உரிய சலுகைகளை கொடுக்கின்றன. அங்கெல்லாம் பா.ஜ.க. தேய்ந்து விடுகி றது. உத்திரபிர தேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே அரசாங்க ஆணையில் பத்தாயிரத் திற்கும் மேலான முஸ்லிம்களுக்கு உர்து முன்ஷி வேலை கொடுத்தது. இதே போல் பி.எஸ்.பி மாயாவதியும் முஸ்லிம்களுக்கு பணியிடங்களை அதிகப்படியாக கொடுத் தார். பீஹாரில் ஆர்.ஜே.டி. வந்தவுடன் லல்லு பிரசாத் முஸ்லிம்களுக்கு அதிக பணியிடங்கள் கொடுத்தார். இந்த மாநிலங் களில் பா.ஜ.க தேய்ந்தது. கேரளாவில் திருப்திகரமாக முஸ்லிம்களுக்கு அர சாங்க பணியிடங்கள் கிடைத்து வரு கின்றன. மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் புத்ததேவ் சிறுபான்மை முஸ்லிம்கள் நலனுக்கு 12 அம்ச திட்டத்தை கொண்டு வந்துள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் முஸ்லிம்களுக்காக இட ஒதுக்கீடு அளித்துள்ளது. இந்த மாநிலங்க ளில் எல்லாம் பா.ஜ.க வளரவே இல்லை.

காங்கிரஸும், பா.ஜ.கவும் நேரடியாக மோதும் மாநிலங்களான குஜராத், ராஜஸ் தான், மத்தியபிரதேசம், டெல்­, ஹரியானா, சத்தீஸ்கர், உத்தராஞ்சல், இமாச்சலப்பிர தேசம், கர்நாடகம் இந்த மாநிலங்களில் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு சலுகைகள் அளிப்பதில் பயப்படும் நிலையே உள்ளது. காங்கிரஸ் மென்மையான இந்துத்துவா கொள்கைகளை கடைப்பிடிப்பதாக கூறப் படும் இந்த மாநிலங்களில்தான், பா.ஜ.க. வளர்ச்சியடைந்து வலுவான நிலையில் உள்ளது.

தீவிரவாதம் :

இந்து' பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண் டும் என்கிறார் அத்வானி. தீவிரவாதிகளை ஒழிப்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் தீவிரவாதிகளை மதவாரியாக பிரிக்க நினைக்கிறார். சென்ற வருடம் பம்பாய் குண்டு வெடிப்பில் ஈடு பட்ட தீவிரவாதிகளை கண்டுபிடித்து கடு மையான தண்டனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று கூறும் அத்வானி, இதே பம்பாயில் 1993லில் நடந்த கலவரத்தில் ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் பால்தாக்கரேயை குற்றவாளி என்று அடையாளம் காட்டி யது, அவர் மேல் நடவடிக்கை எடுக்க அத் வானி ஒரு போதும் கூறியதில்லை. தேவ் பந்தில் உள்ள முஸ்லிம் உலமாக்கள் அமைப்பு முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடக்கூடாது என்று கட்டளையிட் டதை இங்கு குறிப்பிடலாம். தீவிரவாதத்தால் அப்பாவி மக்கள் கொல்லப் படுவது பெரிய பாவச்செயல் என்று இஸ்லாம் கூறுகிறது.

சச்சார் கமிட்டிக்கு எதிர்ப்பு :

ஏப்ரல் 6லிம் தேதி 'இந்து' பத்திரிக் கைக்கு அளித்த பேட்டியில், சச்சார் கமிட்டி அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதன் பரிந்துரைகள் எல்லாம் நேரு அர சாங்கத்திற்கு எதிரானது என்கிறார் அத்வானி. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 18 ஆண்டுகள் இந்தியாவின் பிரதம ராக இருந்தவர் ஜவகர்லால் நேரு. அவர் ஆட்சி காலத்தில், அட்டவணை, மலை சாதியினருக்கு மட்டும் தான் இட ஒதுக்கீடு இருந்தது. ஏனைய பிற்படுத்தப்பட்டோ ருக்கு நேரு காலத்தில் இட ஒதுக்கீடு இல்லை என்பது உண்மைதான். இந்தியா சுதந்திரம் அடைந்து இப்போது 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளா தார வளர்ச்சியில் பிற்படுத்தப்பட்டோருக் கும் சிறுபான்மையினருக்கும் உரிய பங்குகள் கிடைக்கவில்லை. முற்படுத்தப் பட்ட சமூகத்திற்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கும் உள்ள இடைவெளி விரிவடைந்துள்ளது. பிற்படுத்தப்பட் டோருக்கும் சிறுபான்மையினருக்கும் அவரவர் மக்கள் தொகைக்கேற்ப உரிய இடங்கள் கிடைக்கவில்லை. இதனை நிவர்த்தி செய்ய அமைக்கப்பட்டவைதான் மண்டல் கமிஷன், சச்சார் கமிட்டி, அகில இந்திய அளவில் இடஒதுக் கீட்டுக்கான முதல் கதவு 1990 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் வி.பி.சிங்கால் திறந்து வைக்கப்பட்டது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கான தனிசட்டம் 2007 ஆம் ஆண்டில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. சமுதாயத் தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய இடஒதுக்கீடு நியாயமானதே என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. அத்வானியின் கருத்துப்படி இவைகள் அனைத்தும் நேரு அரசாங்கத்திற்கு எதிரானது.

இந்திய பொருளாதார வளர்ச்சியில், முஸ்லிம்களுக்கு உரிய பங்கு கிடைக்க வில்லை. வறுமை கோட்டிற்கு கீழ் ஐந்து கோடி முஸ்லிம்கள் இருக்கின்றனர். இதைத்தவிர, முஸ்லிம்களில் 85% அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலை செய்து தினக்கூ­யாக 20 ரூபாய்க்கு கீழ் பெற்று சமுதாயத்தில் தாழ்ந்த நிலையில் உள்ளனர். இவர்களுடைய பொருளாதார மேம்பாட்டிற்கான வழிவகைகளை ஆராய்ந்து பரிந்துரை செய்தது தான் சச்சார் கமிட்டி அறிக்கை. இதனை எதிர்ப்பதன் மூலம் அத்வானி மற்றும் பா.ஜ.க வினரின் சுயரூபம் வெளிவந்துள்ளது. முஸ்லிம்கள் எப்போதும் பொருளா தாரத்தில் தாழ்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் நிலைபாடு.

அத்வானிக்கு வருத்தமில்லை :

பா.ஜ.க. அத்வானியை பிரதம வேட் பாளராக அறிவித்தவுடன், சுயவிளம்பரத் திற்காக 'என் நாடும் என் வாழ்க்கையும்' என்ற சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார். அந்த புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில், தனது அரசியல் வாழ்க்கையில் எந்தவித வருத்தமும் இல்லை என்று எழுதியுள்ளார். இவருக்கு என்ன வருத்தம் இருக்க முடியும்? பாகிஸ் தானில் இருந்து அகதியாக வந்து, இந்தியாவின் துணை பிரதமரானார். இவருடைய பிள்ளைகள், பேரக்குழந்தை கள் எல்லாம் செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்தியாவிற்கு வந்த இவருடைய அரசியல் பிரவேசத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எவ்வளவு? சோம்நாத் கோவி­லிருந்து ராமரதயாத்திரையை நடத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டு, அதன் பின் நடந்த மதக்கலவரத்தில் இறந்த அப்பாவி முஸ்­ம், இந்து குடும்பங்கள் வருத்தம் இல்லாமலா வாழ்ந்து வருகின்றன? இவர் துணைப் பிரதமராக இருந்து கொண்டு இவர் கையில் மத்திய ரிசர்வ் போ­ஸ் இருக்கும் போது, குஜராத் கல வரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டி ருந்ததால், ஆயிரக்கணக்கான முஸ்­ம் கள் கொலையுண்டனரே அந்த குடும்பங் கள் இன்னும் துக்கத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவருடைய தூண்டுதலால் சங்பரிவார கட்சிகளின் கலவரத்தால் கோடானகோடி சொத்துக் களை இழந்து, நடுத்தெருவில் நிற்கும் முஸ்­ம் குடும்பங்கள் கவலை இல்லாமல் வாழ்கின்றனவா?

அத்வானி அல்வா கடை :

இந்தியா பாகிஸ்தான் என்று இரண் டாக பிரிந்தவுடன் இந்தியாவி­ருந்த முஸ்­ம்கள் விருப்பப்பட்டால் பாகிஸ்தா னில் குடியேறலாம். இதே போல் பாகிஸ்தா னில் உள்ள இந்துக்கள் இந்தியாவில் வந்து குடியேறலாம் என்ற நிலைபாடு இருந்தது. இந்தியாவில் பிறந்தோம். இந்திய மண்ணில் வாழ்வோம். இந்திய மண்ணிலேயே இறந்து மடிவோம். எத்தனை கலவரங்கள் வந்தால் என்ன அதனை நெஞ்சிலே தாங்கிக் கொள் வோம் என்ற மன உறுதியுடன் இந்திய தாய்நாட்டில் இருந்துவிட்ட முஸ்­ம் களின் எண்ணிக்கை ஐந்து கோடி, இந்தியாவில் 1947லில் அன்றைய மக்கள் தொகையில் ஐந்தில் ஒரு பங்கு. இதே போல் எவ்வளவோ இந்து குடும்பங்கள் பாகிஸ்தானில் தங்கி விட்டனர். பாகிஸ்தானி­ருந்து பயந்து ஓடிவந்தவர்களில் ஒருவர் தான் எல்.கே. அத்வானி.

தமிழ்நாட்டில் அல்வாவிற்கு பெயர் போன நகரம் திருநெல்வே­. இது போன்று பாகிஸ்தானில் அல்வாவிற்கு பெயர்போன இடம் கராச்சி. பாகிஸ்தானின் ஆரம்ப கால தலைநகரமும் இதுதான். இந்த கராச்சியில் பிறந்து வளர்ந்தவர்தான் அத்வானி. இந்தியா சுதந்திரம் அடைந்த ஒரு மாதத்தில் கராச்சியில் இருந்து விமா னம் ஏறி டெல்­ வந்தவர். அத்வானி மட்டும் டெல்­ வராமல், கராச்சியிலேயே ஓர் அல்வா கடை வைத்து நடத்தி அங்கேயே தங்கியிருந்தால், பல உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.