![]() |
||
|
|
அமிதாப்பச்சன் விடும் சவால் அன்புமணி ஏற்பாரா? பீடி, சிகரெட் பாக்கெட்களில் மண்டை ஓடு படம் அச்சிட வேண்டும் என்றார். திரைப்படங்களில் மது அருந்தும் காட்சிக் குத் தடை கொண்டு வருவோம் என்றும் சபதமிட்டுள்ளார். மேற்கண்ட நடவடிக்கைகள் மிக மிகச் சரியானவை. பிரபல திரைப்பட நடிகரான அமிதாப்பச்சன் அண்மையில் மத்திய அமைச்சர் அன்பு மணிக்கு எழுதியுள்ள ஒரு கடிதத்தில், சினிமாவில் மட்டுமே சீர்திருத்தம் கொண்டு வர விரும்பும் நீங்கள், அரசு ஊழியர்கள் மது அருந்தத் தடை விதிக்க முடியுமா என்று சவால் விட்டுள்ளார். அன்புமணி இதைக் கண்டிப்பாக ஏற்க வேண்டும். அரசு ஊழியர்கள் மது அருந்துவதால் மிக மோசமான விளைவு கள் சமூகத்திற்கு ஏற்படுவது மறுக்க முடியாத உண்மை. காலங்காலமாய் அரசுத்துறைகளில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. பல அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதே குடி, கும்மாளங்களுக்காகத்தான்.
அரசு ஊழியர்கள் மது அருந்தத் தடை விதித்தால்
நாட்டுக்கு நிச்சயம் நன்மை விளையும். |
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||