அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

நபிகளாரை அவமதிக்க முயன்ற ராஞ்சி பல்கலைக்கழகம்

நபிகள் பெருமானாரை அவமதிக்கும் விதமாக ராஞ்சி பல்கலைக்கழகத்தில் முதுகலை பரிட்சைத்தாளில் கேள்வி ஒன்று கேட்கப்பட்டதால் நாடே கொந் தளிப்பில் ஆழ்ந்தது.

இதனைக் கண்டித்து நூற்றுக்கணக் கான மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். ஆர்ப்பாட்டத்தில் இறங்கிய மாணவர்களை அடக்க பல்கலைக்கழக நிர்வாகம் காவல்துறையை வரவழைத் ததைத் தொடர்ந்து வன்முறை வெடித்தது.

சம்பவஇடத்திற்கு வந்த துணை வேந்தர் ஏ.ஏ. கான் அந்த சர்ச்சைக்குரிய வரலாற்று வினாத்தாளை ரத்து செய்தார்.

இது குறித்து அவசர கூட்டம் கூட்டிய முதல்வர் மதுகோடா பல்கலைக்கழக வினாத்தாளில் எவ்வாறு பெருமானாரை அவமதிக்கும் கேள்வி இடம் பெற்றது என்பது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஷமிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதி அளித்ததனால் தற்காலிகமாக அமைதி திரும்பியது.

 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.