அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

உதகை: அடக்கத்தல நிலத்தை அபகரிக்க முயலும் நகராட்சி  (நேரடிகளத்தொகுப்பு)

-மரியன் குமாரன்

மலைகளின் அரசி எனப் போற்றப் படும் உதகமண்டலத்தில் (ஊட்டி) முஸ்லிம்கள் கணிசமாக வசித்து வருகின்றர். உதகை நகராட்சிக்குட்பட்ட தெற்கு ஏரிச்சாலையில் 2007ம் ஆன்டு மரவியல் பூங்கா அமைக்கப்பட்டது. அப்பூங்கா விற்கு எதிரே முஸ்லிம்களுக்குச் சொந்த மான அடக்கஸ்தலம் 16 சென்ட் உள்ளது. அந்த நிலத்தை அபகரிக்க உதகை நகராட்சி முயன்று வருகிறது. காரணம் மரவியல் பூங்காவிற்கு வருவோரின் வாக னங்களை நிறுத்த இடம் வேண்டுமாம்.

நில அபகரிப்பு முயற்சியில் நகராட்சியே இறங்குவதை அறிந்து கொண்ட உதகை மாவட்ட தமுமுக அவ்விடத்தை தனது கட்டுப்பாட்டில் எடுத்தது அடக்கஸ்தலமாக முஸ்லிம்களுக்கு அந்த இடம் 30 ஆண்டு களுக்கு முன்பு வழங்கப்பட்டதற்கான, ஆவணங்களைத் திரட்டிய தமுமுக வினர் இடத்தை சுற்றி வேலி அமைத்து அறிவிப்பும் எழுதிப்போட்டு விட்டனர். நிலத்தை சுற்றி தமுமுக கொடிகளும் கட்டப் பட்டன. தமுமுக வினர் அனுமதியின்றி கொடிகள் கட்டிவிட்டதாகவும். ஆகவே, 30.04.2008 அன்று விசாரணைக்கு வரவேண்டும் என்றும் நகராட்சி உதகை தமுமுக நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப் பியது. இதுவிவரமறிந்து கோவைக்கு வந்திருந்த மாநிலத் துணைச் செயலாளர் பேரா.ஜெ.ஹாஜாகனி மற்றும் கோவை மாவட்டச் செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்டத் துணைச் செயலாளர் நூர்தீன் மற்றும் சகோதரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆவணங்கள் தெளிவாக இருக்கும் போது, நகராட்சியின் அபகரிப்பு முயற்சிக்கு உடன்படத் தேவையில்லை என ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்தபின், நகராட்சிக் கூட்டத்தில் தமுமுக மாவட்டத் தலைவர் கே.அப்துஸ் ஸமது, மாவட்டச் செயலாளர் ஏ.கே.ரிசாலத், மாவட்டப் பொருளாளர் காலிப் மற்றும் வர்த்தகர் அணி செயலாளர் ஹெச்.எம்.பி. அலி, நகரத் தலைவர் அக்பர் அலி, நகரச் செயலாளர் கராத்தே சாதிக், ஐக்கிய ஜமா அத்தைச் சேர்ந்த யூசுப் ராஜா, டி.எஸ்.கே .பாபு, பாஷா பாய் ஆகியோர் கலந்து கொண்டனர். நகராட்சி அதிகாரிகளோடு நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

உதகை மாவட்ட தமுமுக தலைவர் அப்துஸ் ஸமது இந்நிலம் குறித்த விவரங் களைத் தெரிவித்தார். 1936ம் ஆண்டு உதகையில் பிளேக் போன்ற கொள்ளை நோய் பரவி, ஏராளமானோர் உயிரிழந் தனர். முஸ்லிம்களும் கணிசமாக இறந் தனர். அப்போது முஸ்லிம்களின் சடலங் கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. 1970ம் ஆண்டு டாக்டர் பசவய்யா என்ப வர் உதகமண்டல நகராட்சித் தலைவராக இருந்தார். அவர், அந்நிலத்தை முஸ்லிம் கள் அடக்கத்தலமாகத் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள தானமாகக் கொடுத்தார். 1936ம் ஆண்டு முதல் முஸ்லிம் சடலங் கள் இங்கு அடக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டி, முஸ்லிம் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்ததன் விளைவாக இந்த நிலம் தானமாக வழங்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலரின் சான்றிதழும் இதற்கு உள்ளது. இடைப்பட்ட காலத்தில் அந்த இடத்தில் நல்லடக்கம் நடைபெறவில்லை. உடனே அதை அபகரித்துக் கொள்ள உதகை நகராட்சி முயல்கிறது. ஐக்கிய ஜமாஅத்தும் உதகை முஸ்லிம்களும் இவ்விடத்தைப் பாதுகாக்க, தமுமுகவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டிய ஒரு நகராட்சியே முஸ்லிம்களின் அடக்கத்தலத்தை ஆக்கிரமிக்க முயல்வது அநியாயம். உதகை நகராட்சி முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.