அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

இஸ்லாமிய வங்கி என்றால் என்ன?
டாக்டர் பட்டம் பெற்றவுடன் மக்கள் உரிமைக்கு
பேரா.எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அளித்த சிறப்பு பேட்டி

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச், ஜவாஹிருல்லாஹ் தான் சமர்ப்பித்த இஸ்லாமிய வங்கியியல் குறித்த டாக்டர் பட்ட ஆய்வு கட்டுரைக்காக சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இந்த ஆய்வு குறித்த வாய்மொழித் தேர்விற்கு பிறகு மக்கள் உரிமைக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி........

இஸ்லாமிய வங்கி என்றால் என்ன?

இஸ்லாமிய வங்கி என்றால் வட்டியில்லாமல் இயங்கும் வங்கி, இத்தகைய வங்கிகளுக்கு வட்டியில்லா வங்கிகள் என்றும் லாபம் மற்றும் இழப்பைப் பகிரும் வங்கி என்றும் பெயர் உண்டு. சாதாரண வங்கிகள் செய்யும் அனைத்துப் பணி களையும் வட்டியில்லா வங்கிகள் செய்கின்றன. ஆனால் சாதாரண வங்கி களுக்கும் இஸ்லாமிய வங்கிகளுக்கும் இடையே உள்ள அடிப்படை வேறுபாடு வட்டி தான். இஸ்லாமிய வங்கிகüல் நடப்பு கணக்கு, சேமிப்புக் கணக்கு, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான பரிவர்த்தனைகள், பன்னாட்டு செல வாணிகளை உடனே மாற்றம் செய்தல், பணங்களை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுதல் உள் üட்ட அனைத்து வங்கி நடைமுறை களையும் இஸ்லாமிய வங்கிகள் செயல் படுத்துகின்றன. ஆனால் இவை அனைத்தும் வட்டியின் அடிப்படையில் நடைபெறுவதில்லை.

வட்டியில்லாமல் ஒரு வங்கி எப்படி செயல்பட முடியும்?

தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் வட்டியை கடுமையாக எதிர்த்துள்ளார். யூத மதத்திலும் யூதர்கள் தமக்கிடையே வட்டியின் அடிப்படையில் பரிவர்த்தனை செய்திடக் கூடாது என்று கூறப்பட்டது. ஆனால் யூதர்களுக்கு பிற சமூகத்தினர் கடனாகக் கொடுக்கும் பணத்திற்கு வட்டி வசூலிப்பதால் அத்தகையோரிடம் செய்யப்படும் பரிவர்த்தனைகல் யூதர் களும் வட்டியை வசூலிக்கலாம் என்று விலக்கüக்கப்பட்டது. கிறிஸ்தவத்தில் ஏசு நாதர் பிரதி உபகாரம் எதிர்பாராமல் பிறருக்குக் கடன் அüயுங்கள் என்று கூறி யதை (லூக்கா 6:35) வட்டிக்கு எதிரான பிரகடனம் என்றே சில அறிஞர்கள் கருதுகிறார்கள். திருக்குர்ஆனில் பல் வேறு வசனங்களில் வட்டியை இறைவன் தடை செய்துள்ளான்.

வட்டி (வாங்கித்) தின்பவர்கள் ஷைத்தான் பிடித்துப் பித்தம் கொண் டவர்கள் எழும்புவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழும்ப மாட்டார்கள். காரணமாவது: வட்டியைப் போலவே நிச்சயமாக வணிகமும் இருக்க, அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து வட்டியை (ஏன்) தடுத்து விட்டான்? என்று அவர்கள் (பரிகாச மாகக்) கூறியதுதான். (வட்டி வாங்கக் கூடாது என்று) இறைவனிடமிருந்து வந்த அறிவுரைப்படி யாராவது (உங்களில் அதைவிட்டு) விலகிக் கொண்டால் (அதற்கு) முன் அவர் வாங்கிய) அவருடைய விஷயம் அல்லாஹ்விட மிருக்கின்றது. (அல்லாஹ்வின் உத்தரவு வந்தபின் வட்டியை விட்டுவிட்டதினால் அல்லாஹ் அவரை மன்னித்து விடலாம்) தவிர, (இந்த உத்தரவு கிடைத்த பின்) எவரேனும் பிறகும் (வட்டியின் பக்கம்) திரும்பினால் அவர்கள் நரகவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்
திருக்குர்ஆன் 2:275

மனித வாழ்க்கையில் வங்கிகள் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ள தால் வங்கிகளைத் தவிர்த்து முஸ்லிம்கள் வாழ இயலாது, எனவே தான் வட்டியில்லாமல் இயங்கும் வங்கிகள் தொடங்கப்பட்டன, வட்டி இல்லாமல் இயங்க முடியும் என்பதை இஸ்லாமிய வங்கிகள் நிரூபித்துள்ளன. மனிதர்கüல் ஒரு சாரார் தமது உபரி பணத்தை வங்கியில் போட்டு வைக்கின்றனர். இன்னொரு தரப்பினர் தொழில் செய்வதற்குப் பணம் இல்லாமல் தத்தüக்கின்றனர். இவர்கள் இருவருக் கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் இடைத்தரகராக வங்கி செயல்படுகின்றது. சாதாரண வங்கிகள் தன்னிடம் போடப்பட்ட பணத்தை, தொழில் தொடங்கப் பணம் தேவை என்று விண்ணப்பித்தவருக்கு அüக்கின்றது. பணத்தைப் பெறுபவரிடம் கூடுதல் வட்டி தொகையை வசூலித்து அதில் ஒரு பகுதியைத் தன்னிடம் வைத்துக் கொண்டு மீதியை வங்கியில் பணம் போட்டவருக்கு வழங்குகின்றது இதற்கு மாற்றமாக இஸ்லாமிய வங்கி தொழில் தொடங்கப் பணம் தேவைப்படுபவரின் தொழிலில் ஒரு பங்காகயாகச் சேர்த்துக் கொள்கிறது.. அவருடன் அத்தொழிலில் லாப நஷ்டத்தைப்பகிர்ந்து கொள்ளும் உடன்படிக்கையை செய்துகொள்கிறது. இந்தத் தொழிலில் இருந்து வரும் வருமானத்தில் ஒரு பகுதியை தான் வைத்துக் கொண்டு, மீதியை தன்னிடம் பணம் போட்டவருக்கு அவருடன் செய்து கொண்ட அடிப்படையில் அüத்து விடுகின்றது. இது போல் ஒருவருக்கு ஒரு நுகர்பொருள் அல்லது வீடு அல்லது தொழில் கருவி தேவைப்பட்டால் அதனை வாங்கி லாபம் வைத்து அவருக்கு விற்பனைச் செய்கிறது. அப்பொருளை பெறுபவர் பல தவணைகüல் அந்த விலையைத் திரும்பச் செலுத்தலாம். இது போல் வட்டியில்லாமல் லாப நஷ்டத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் பல பரிவர்த்தனைகளை இஸ்லாமிய வங்கிகள் செய்து வருகின்றன. பணம் கொடுக்கல் வாங்கல் தவிர ஏனைய பரிவர்த்தனைகüல் இஸ்லாமிய வங்கிகள் வாடிக்கையாளர்கüடமிருந்து கமிஷன் பெற்றுக்கொள்ளலாம்.

வட்டியில்லாத அடிப்படையில் இயங்கும் வட்டியில்லா வங்கிகள் வெற்றிப் பெற்றுள்ளனவா?

நிச்சயமாக வெற்றி பெற்றுள்ளன. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகüலும் 300 இஸ்லாமிய வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் முஸ்லிம் நாடுகüல் அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், தாய்லாந்து, ஆஸ்திரேலியா, டென்மார்க், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகüலும் உள்ளன. இஸ்லாமிய வங்கிகüன் சொத்து மதிப்பு 500 பில்லியின் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது. வைப்புத் தொகை 202 பில்லியன் டாலர்களை விட அதிகமாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் 10 முதல் 20 சதவிகிதம் வரை பெருகி வருகின்றது. மூலதனத்தில் இருந்து வரும் ஈட்டுத் தொகையை ஆராய்ந்த போது ஏனைய வங்கிகளுக்கு இணையாக இஸ்லாமிய வங்கிகளும் லாபத்தைப் பெற்றுள்ளதை பார்க்க முடிகின்றது. இந்த வங்கிகüல் முஸ்லிம்கள் மட்டுமல்லாது முஸ்லிமல்லாதாரும் வாடிக்கையாளர் களாக இருக்கின்றார்கள்.

இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகளை செயல்படுத்துவது சாத்தியமா?

பல மதசார்பற்ற நாடுகüல் ஹெச்.எஸ்.பி.சி, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி, பி.என்.பி. பார்னிபாஸ் போன்ற வங்கிகள் வட்டியில்லாத முறையிலும் தங்கள் பாரம்பரிய வங்கிகüல் பரிவர்த் தனைகள் நடைபெற வழிவகுத்துள்ளன. இந்த வட்டியில்லாத பரிவர்த்தனைகள் அந்த வங்கிகüல் ''இஸ்லாமிக் வின்டோஸ்'' என்று அழைக்கப்படு கின்றது. இது போன்று இந்தியாவிலும் தாங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று அந்த வெüநாட்டு வங்கிகள் இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளன. நமது பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் வட்டியில்லாமல் செயல்படும் வங்கிகளை இந்தியாவில் செயல்பட அனுமதிப்பது தொடர்பாக ஆய்வுச் செய்வதற்காக ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளார். சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, பிரிட்டன் உள்üட்ட நாடுகள் தங்கள் நாடுகüல் வங்கிகளை நிர்வகிக்கும் சட்டங்களைத் திருத்தி இஸ்லாமிய வங்கிகள் செயல்பட வழிவகுத்துள்ளன. இதே போல் இந்திய அரசும் செய்ய வேண்டும். எனது ஆய்வில் இது குறித்த தெளிவான வழிமுறைகளை குறிப்பிட்டுள்ளேன். இதன் விளைவாக நமது நாட்டில் முதலீடுகள் அதிகரிக்கும். இது மட்டு மின்றி வெüநாடுகüல் இயங்கும் நமது இந்திய வங்கிகள் இஸ்லாமிக் வின் டோஸ் திறந்து முதலீடுகளைப் பெருக்கிக் கொள்ளும். முஸ்லிம்கள் வங்கிகளை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்வ தில்லை என்று சச்சார் குழு அறிக்கை கூறுகின்றது. இதற்குக் காரணம் வட்டி தான். வட்டியில்லாத வங்கிகள் செயற் படத் தொடங்கினால் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி வட்டியின் கொடுமையினால் பாதிக்கப்படும் பிற ஏழை எüய இந்தியர் களுக்கும் அது ஓர் அருட்கொடையாக அமையும்.
 

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.