![]() |
||
|
|
வேலுர் கோட்டை பள்ளிவாசல் விவகாரம் அரசு தரப்புப் பேச்சுவார்த்தை / போராட்டத்தில் தமுமுக உறுதி
இதற்கிடையே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னை தொடர்பாகத் தமிழ்நாடு ி முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் பல கட்டப் பேச்சு வார்த்தைகளை நடத்தியது. இதன் தொடர்ச்சியாகக் கடந்த மே 3ம் தேதி சென்னை கோட்டையில் உள்ள அகழ்வாராய்ச்சி இயக்குனர் அலுவலகத்தில் இப்பிரச்னை தொடர்பாகப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகக் கழகத்தில் பொருளாளர் ஒ.யூ, ரஹ்மதுல்லாஹ், தொழிலாளர் அணிச் செயலாளர் ஜே. அவுலியா, வேலூர் மாவட்டத் தலைவர் தஸ்தகீர், மாவட்டப் பொருளாளர் ஏஜாஸ், மாவட்ட உலமா அணிச் செயலளார் சம்சுதீன் நாஸர் உமரி ஆகியோர் பங்குக் கொண்டனர். இந்திய அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக அகழ்வாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் சத்யபாமா பத்ரிநாத், வேலூர் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமதாஸ், காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் வேலூர் கோட்டாட்சியர் மாரியப்பன் ஆகியோர் பங்குக் கொண்டனர்,
இதனைத் தொடர்ந்து வேலூரிலும் இப்பேச்சு
வார்த்தைகள் மே 4ம் தேதி தொடர்ந்தன. தமுமுக தரப்பில் பள்ளிவாசல் திறக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித சமரசமும் இல்லை என்று தெளிவாக
எடுத்து வைக்கப்பட்டது. தமுமுகவின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால்
திட்டமிட்டப்படி வேலூர் கோட்டை பள்ளிவாசல் மே 9ம் தேதி ஜும்ஆ தொழுகை
நடைபெறும் என்று தமுமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
||