அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

மேல்நிலைப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் இருக்கும் மேல்நிலைப் பள்ளிகளில் +1 வகுப்பு மாணவர் சேர்க்கை யில் 69% இடஒதுக்கீட்டை கடைப்பிடிக் காத தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், அரசுப் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை நடை முறைப்படுத்தாத தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித் துள்ளது. இந்த உத்தரவால் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் வசதியற்ற பிற்படுத்தப்பட்ட மற்றும் முஸ்லிம் மாணவர் களும் படிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது. 3.5% இடஒதுக் கீட்டின் மூலம் முஸ்லிம் மாணவ, மாணவியரும் தற்போது தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சேரலாம். சீட்காலி இல்லை, நன்கொடை வேண்டும் என்று பள்ளி நிர்வாகம் அடம்பிடித்தால் சட்ட ரீதியாக பள்ளி நிர்வாகத்தை சந்திக் கலாம். இடஒதுக்கீட்டை அமுல்படுத்தாத பள்ளி களின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளதால் பெரும் பாலும் இவ்வுத்தரவு நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது.

சென்னையில் உள்ள சில தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் +1 வகுப்பு சேர்க் கைக்கே லட்சங்களை கேட்கும் நிலை உள்ளது. கல்வித் தரத்துக்காக இல்லை யெனினும் கவுரவத்துக்காக புகழ்பெற்ற பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க பெற்றோர்கள் பணங்களை செலவழிக்க தயாராக உள்ளனர். இவர் களை தவிர்த்து விட்டு பார்த்தால் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் இது போன்ற கல்வி நிலையங்களில் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட மாணவர்கள் இனி தைரிய மாக இப்பள்ளிகளை அணுகலாம்.

தமிழக அரசு வெறும் சட்டங்களை இயற்றுவதோடு நின்றுவிடாமல் இடஒதுக்கீடு முறை இப்பள்ளிகளில் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க கல்வியாளர்கள், சமூக அமைப்புகள் கொண்ட ஒரு ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். பள்ளி களின் சேர்க்கைக்காக வினியோகிக்கப் பட்ட விண்ணப்பங்கள் எத்தனை, அனை வருக்கும் விண்ணப்பங்கள் கிடைக்கிறதா, மேலும் விண்ணப்பித்த மாணவர்களின் தகுதிக்கேற்பவும், இடஒதுக்கீட்டுக் கொள் கைக்கேற்பவும், சேர்க்கை நடைபெறு கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இடஒதுக்கீட்டை சரியாக அமல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க இக்குழுவுக்கு அதிகாரமளிக்க வேண்டும், இந்த முறையை கல்லூரி சேர்க்கைகளி லும் கடைப்பிடிக்கலாம்.

தமுமுக போன்ற சமுதாய அமைப்பு கள் தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை கண்காணிக் கலாம். முஸ்லிம் மாணவர்களுக்கு சரி யான முறையில் பிரதிநிதித்துவம் அளிக் கப்படுகிறதா என்பதை கண்காணிக்க தமுமுக மாணவரணி முயற்சி செய்யும், சரியான இடஒதுக்கீடு அளிக்காத பள்ளி நிர்வாகத்தின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், மாணவரணி முயற்சிகள் மேற்கொள்ளும். முஸ்லிம் சமுதாயம் இவ்வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 

 

முந்தைய செய்திகளைப் பார்க்க இங்கெ கிளிக் செய்யவும்