![]() |
||
|
|
இஸ்லாமிய பயங்கரவாதம்' இது மதவாதிகள் தீட்டிய கச்சிதமான சதித்திட்டம்! தீஸ்தா செதல்வாட் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ஒடுக்கு முறை, அநீதி, சமத்துவமற்றத்தன்மை போன்ற வற்றுக்கு எதிராக எழுந்தது இஸ்லாம். ஆனால் இன்று அந்தக் கொள்கையை கொச்சைப்படுத்தும் விதமாக 'இஸ்லாமிய பயங்கரவாதம்' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மதவாதிகள் தீட்டிய கச்சிதமான சதித்திட்டம் என மனித உரிமை போராளி தீஸ்தா செதல்வாட் குறிப்பிட்டிருக்கிறார். 'முஸ்லிம்களுக்கு எதிராக சுமத்தப்படும் பயங்கரவாதத்தின் உண்மை நிலை' என்ற தலைப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் மாநாடு நடைபெற்றது. இதில் உரையாற்றிய தீஸ்தா செதல்வாட் இஸ்லாத்திற்கும் ஜனநாயகத் துக்கும் எத்தகைய மோதலும் கிடையாது. இஸ்லாம் மனித உரிமைகளுக்கு எதிரான வன்முறைகளையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் வன்மையாக எதிர்த்து வந்திருக்கிறது. 2002ல் நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக் காக நீண்டதொரு சட்டப்போரை முன்னெடுத்த செதல்வாட் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், தலித் சமூகத்தவர், ஆதிவாசிகள் தங்களுக்குள் ஒன்றிணைந்து உரிமைகளுக்காக போராட வேண்டும்' என்றார். சிறுபான்மை சமூகத்தவர் தங்களிடையே உள்ள வேறுபாடுகளைக் களைந்து விட்டால் மதவாதம் வாழ முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மஹ்மூத் மதானி தெரிவித்தார். இஸ்லாம் எதிர்மறை சிந்தனைகளுக்கும் பயங்கரவாதத்திற்கும் எதிரான மார்க்கம் என மில்லி கவுன்சிலின் துணைத் தலைவர் யாசீன் உஸ்மானி குறிப்பிட்டார். ஹாலித் ரஷீத் பீராங்கி மஹல்லி, டாக்டர் ஜான் தயாள், ஜமியத்தே அஹ்லே ஹதீஸ் மர்க்க ஸின் அமீர் அஸ்கர் அலி மெஹ்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இதில் பங்கேற்றனர். |
|