![]() |
||
|
|
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை சித்திரவதையில் இருந்து மீட்க கூட்டுக்குழு பயங்கரவாதிகளை விசாரிக்கிறோம் என்ற பேரில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பிடித்து வைத்து துன்புறுத்தும் போக்கிற்கு நாளுக்கு நாள் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலை பத்திரி கையாளர்கள் உள்ளிட்டோர் இது குறித்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் முன்னணி முஸ்லிம் அமைப்புகள் இந்தியப் பிரதமர் டாக்டர். மன்மோகன் சிங்கை சந்தித்து அப்பாவி இளைஞர் களின் அவலநிலை குறித்து முறையிட்டனர். ஜமாத்தே இஸ்லாமி, ஜமாஅத்தே உலமாயே ஹிந்த், முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், முஸ்லிம் மஜ்லிúஸ முஷாவராத் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பிரதமரை சந்தித்தனர். திடீர் திடீரென அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவது குறித்தும், பல மீடியாக்கள் தங்கள் சொந்த கற்பனைகளை 'விசாரணை விவரங்கள்' போல் வெளியிடுவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் தலைவர்கள், உளவுத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கொண்ட கூட்டுக்குழு ஒன்று அமைத்து இப்பிரச்சினையை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்தார். |
|