![]() |
||
|
|
ஈரானுக்கு ஆதரவு! அமெரிக்காவுக்கு எதிர்ப்பு!! ஈரான் யுரேனிய செழுமைப்படுத்தும் திட்டத்தை நிறுத்திவைக்க இந்தியா அறிவுறுத்த வேண்டும் என அமெரிக்கா தெரிவித்தது. ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமது நிஜாதி ஏப்ரல் 29ஆம் தேதி தனது இலங்கை பயணத்தின் போது இந்தியாவிற்கு சில மணிநேரங்கள் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டது. ஈரான் அதிபர் வரும்போது ஈரான் யுரேனிய செழுமைப்படுத்தும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என ஈரான் அதிபரிடம் இந்தியா கூறவேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் டாம் கேசி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தியா தனது கருத்தை கடுமையான தொனியில் கூறியது.
இந்தியா என்ன செய்ய வேண்டும் என
அமெரிக்கா கூறக்கூடாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான வலுவான உறவு பேணும்
இந்தியாவும் ஈரானும் தங்களுக்கிடையேயான ராஜ்ய ஒப்பந்தங்களை தொடர்வதில்
கவனம் செலுத்தும் வேளையில் அமெரிக்காவின் தேவையற்ற பிரசங்கங்கள்
கண்டிக்கத்தக்கது என இந்திய வெளியுறவுத்து:றை சுடசுட பதிலடி கொடுத்தது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறதா? இல்லையா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு
பன்னாட்டு அணு ஆற்றல் முகமைக்குத்தான் உண்டே தவிர அமெரிக்காவுக்கு அல்ல
என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி அதிரடியாய்
அறிவித்தார். |
|