அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

ஒரே மேடையில் 5000 ஏழை முஸ்லிம்களுக்கு திருமணம்!

ஆந்திர மாநில அரசு 5000 ஏழை முஸ்லிம் பெண் களுக்கு திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டி யுள்ளது. இதற்கென 2008லி2009ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய் துள்ளது. இதுகுறித்த விரிவான ஆலோசனை நடத்து வதற்காக முஸ்லிம் மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் உயர் அதிகாரிகளின் கூட்டம் கூட்டப்பட்டது.

ஆண்டுதோறும் திருமலை திருப்பதி தேவஸ் தானம் ஆயிரக்கணக்கான ஹிந்து ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வருகிறது. இந்தத் திட்ட வரைவை பயன்படுத்தி 5 ஆயிரம் முஸ்லிம் ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு திருமண ஜோடிக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் திருமண அன்பளிப்பாக வழங்க திட்ட மிட்டுள்ளதாகவும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

இந்த மெகா திருமண நிகழ்ச்சிக்காக ஏழை முஸ்லிம் பெண்களைத் தேர்வுசெய்து நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்ட பொறுப்புகள் ஆந்திர மாநில வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

 

 

முந்தைய செய்திகளைப் பார்க்க இங்கெ கிளிக் செய்யவும்