அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

10 கோடி மக்கள் பட்டினியால் வாடும் அபாயம்!

உலக அளவில் மின்னல் வேகத்தில் ஏறிவரும் விலைவாசியினால் 10 கோடி மக்கள் பட்டினியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஏறிவரும் உணவுப் பொருட்களின் விலைவாசியை சுனாமி பேரழிவை எதிர்கொள்வதைப் போன்று போராட வேண்டும் இல்லையெனில் மேலும் பல லட்சக்கணக்கான மக்களின் நிரந்தர பட்டினிக்கு அது வழிவகுத்து விடும் என்று உலக உணவுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜோசட்டே ஷீரான் தெரிவித்தார். 45 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்று என்ற அவர் சர்வதேச சமூகம் அவசர நிலை நடவடிக்கை எடுத்து ஒரு அவசரத் தீர்வை எட்ட வேண்டும்.

சுனாமிக்குப் பிறகு நன்கொடையாளர்கள் 12 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு உதவிகள் செய்தனர். அதைப் போன்ற கருணைக்குரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தருணம் இது என்றும் உலக உணவுக்கழக நிர்வாக இயக்குநர் தெரிவித்தார். நன்கொடை வழங்கும் நாடுகள் மற்றும் ஐநா அமைப்புகள், உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் தனியார் நிறுவனங்கள் செயலில் இறங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 

 

முந்தைய செய்திகளைப் பார்க்க இங்கெ கிளிக் செய்யவும்