அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

ஆப்கான்: அமெரிக்க ஆதரவு சக்திகளின் முகத்தில் அடுப்புக் கரி

தாலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றுவதற் காகவும், ஐரோப்பிய பாணியிலான ஆட்சியை அமைப் பதற்காகவும் அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ராணுவ உதவியுடன் ஆப்கானில் புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. தங்களின் விருப்பப்படி ஆட்சி முறை செயல்படுத்தப்படும் என்று நம்பியிருந்த அமெரிக்கா மற்றும் நேட்டோ தரப்பினருக்கு கடந்த வாரம் மிகப்பெரிய அதிர்ச்சி வைத்தியத்தை அங்கு ஆட்சி செய்துவரும் ஹமீத் கர்சாய் அரசு செய்துள்ளது.

ஆப்கானிய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்துள்ள சட்ட முன் வடிவின் நகல் ஆஎட என்ற பிரெஞ்சு செய்தி நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது.

பெண்கள் வெளிப்படையாக மேக்கப் போட இந்த சட்ட முன்வடிவு தடை விதிக்கிறது. அத்துடன் ஆண்கள் பெண்கள் போல் உடை உடுத்தக் கூடாது. பெண்கள் பர்தா அணியாமல், ஹிஜாப் அணியாமல், அலுவலகங் களில் பணிபுரியக் கூடாது என்பது உள்ளிட்ட உத்தரவுகளை சட்ட முன்வடிவு வலியுறுத்துகிறது.

 

 

முந்தைய செய்திகளைப் பார்க்க இங்கெ கிளிக் செய்யவும்