பிஞ்சு குழந்தைகள் கொலை?
தொடரும் அதிகார வர்க்கத்தின் அலட்சியம்!!
இப்பி பக்கீர்
திருவள்ளூர் மாவட்டம் பெண்ண லூர் பேட்டையில் உள்ள கச்சூர் ஆரம்ப சுகாதாரத்துறை சார்பாக குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசி (மீசிலியஸ் வேக்சின்) போடப்பட்டிருக்கிறது. தட்டம்மை ஊசி போட்ட ஒரு சில நிமிடங்களிலேயே பிஞ்சு குழந்தைகளின் உடல்கள் நீலம் பாரிக்க ஆரம்பிக்க வலிப்பும் வந்திருக் கிறது. தடுப்பூசி போடப்பட்ட மூன்று குழந்தைகள் வாயில் நுரை தள்ளி இறந்திருக்கின்றன. குழந்தைகளின் பெற்றோர்கள் அலறி துடித்திருக் கின்றனர்.
எதற்காக இறந்தோம் என்று தெரியாமல் குழந்தைகள் இறந்து போக, குழந்தைகளின் இழப்புக்கு காரணம் தெரியாமல் பெற்றோர்கள் துடிக்க அதிகார வர்க்கத்தின் அலட்சியம் கலைந்து அரசு அதிகாரிகளும், அமைச்சர்களும் மருத்துவமனையில் குவிய ஆரம்பித்தனர். இதற்கிடையே தட்டம்மை ஊசி போடப்பட்ட குழந்தை ஒன்று திருத்தணி அருகே இறந்து போக திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி போடப்பட்ட அனைத்து குழந்தைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளன.
இதற்கிடையே குழந்தைகளுக்கு போடப்பட்ட தடுப்பூசி மருந்துகள் ஆய்வுக்காக இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஆய்வு நிலையத்துக்கு அனுப்பப் பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தட்டம்மை தடுப்பூசி போடும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதோடு தடுப்பூசி போட்ட நர்ஸ்களும் இடைக் கால பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்படுள்ளனர். குழந்தைகளுக்கு போடப்பட்ட தடுப்பூசி மருந்துகள் ஹைதராபாத்தில் உள்ள ஹியூமன் பயாலஜிகள் இன்ஸ்டியூட்டில் இருந்து வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு மத்திய அரசு நிறுவனமாகும். தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கி வருகிறது.
குழந்தைகளுக்கு போடப்படும் இந்த தடுப்பூசி மருந்துகள் சரியாக ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழ் அளிக்கப் பட்டவையா, சரியான முறையில் குளிர் சாதன பெட்டிகளில் பராமரிக்கப்பட்ட வையா? என்கிற விவரங்கள் வெளி வருவதற்குள் இத்தகைய அலட்சியங் களுக்கு காரணம் என்ன என்று தெரிவதற்குள் இந்த இறப்புகளை பெற்றோர்களைத் தவிர அனைவரும் மறந்து போயிருப்பர். இதுவே அதிகார வர்க்கத்தின் அலட்சியத்துக்கு அருமருந் தாகி விடுகிறது.
இதில் இன்னொரு கொடுமை என்ன வென்றால் குழந்தைகள் இறப்பிற்கு முன்பே திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல அம்மருத்து வமனையை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் கேட்டிருக்கிறார்கள். ஆனால் வெகு நேரமாகியும் ஆம்பு லன்ஸ் வராததால் வாடகை வாகனத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற் குள் குழந்தைகள் இறந்து போயிருக் கின்றன. அரசு ஊழியர்களின் தொடர் அலட்சியங்களால் சாதாரண மக்களின் உயிர் போவது நமது நாட்டில் குழந்தை களைப் பார்த்த பொதுமக்கள் கொதித் தெழுந்துள்ளனர். அந்த தீப்பொறி கோபம் நியாயமானது. ஆயிரம் காரணங்கள் சொன்னாலும் அந்த பெற்றோர்களின் துயரத்தை யாரால் ஈடுசெய்ய முடியும்?
கொஞ்சி வளர்த்த பிள்ளைகள் தடுப்பூசியால் கொல்லப்பட்டிருக்கிறார் கள் என்பதை பெற்றெடுத்த தாயுள்ளங் கள் எப்படி ஜீரணிக்க முடியும்?
இந்தக் கொடுமைகளுக்கு யார் முடிவு கட்டுவது? மனித உயிர்களின் மதிப்பு இவர்களுக்கு எப்போதுதான் தெரியுமோ!
