எலக்ட்ரானிக் மீடியா! கல்வித் தகவல்
-திப்பு

இந்தியாவில் தொலைக்காட்சி என்றாலே தூர்தர்ஷனும், வானொலி என்றாலே ஆல் இந்தியா ரேடியாவும் தான் என்ற நிலைமை இருந்தது. ஆனால் இன்று தமிழில் மட்டும் 20க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள் உள்ளன. பண்பலைகள் மாவட்டந்தோறும் முளைக்க தயாராகிக் கொண்டிருக்கின்றன.

குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை, படுகொலையாளர்களின் வாயில் இருந்தே உண்மைகளை வரவழைத்த டெஹல்கா வின் வீடியோக்காட்சிகளைப் பார்த்தால் இப்போதும் நமது நரம்புகள் முறுக்கேறும்.

பத்திரிக்கைத்துறையின் வளர்ச்சியைவிட, தொலைக்காட்சிகளின் வளர்ச்சியும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே போகிறது. பத்திரிக்கைத் துறையை மட்டுமே தங்கள் கல்வி நிறுவனங்களில் பாடமாக வைத்திருந்த கல்வி நிறுவனங்கள் இன்று தொலைக்காட்சிகளுக்கும் தேவையான திறமையாளர்களை உருவாக்குவதில் தேவையான கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பண்பலைகளின் வருகையும் வானொலியின் முக்கியத்துவத்தை எலக்ட் ரானிக் மீடியாக்களின் ஆதிக்கத்தை நம்மிடையே பறைசாற்றுகிறது.

தொலைக்காட்சி மற்றும் வானொலிகளை விட நியூ மீடியா எனும் இணைய தள இதழ்கள் இன்று விசுவரூபமெடுத் துள்ளன. தொலைக் காட்சி, வானொலி, இணையதளம் ஆகிய மூன்றும் தான் எலக்ட்ரானிக் மீடியா என வகைப்படுத்தப் படுகிறது.

எங்குப் படிக்கலாம்?

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஏஷியன் காலேஜ் ஆஃப் ஜர்னலிசம் ஓராண்டு பிராட்காஸ்டிங் மற்றும் நியூ மீடியா ஆகிய படிப்புகளை வழங்குகிறது. இதில் ஹிந்து, பி.பி.சி., ஆகியவற்றில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் உள்ள ஜாமிஆ மில்லியா இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தில் 'மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் ரிசர்ட் சென்டரில் கற்றுத் தரப்படும் ஊடகப் படிப்புகளுக்கு கிராக்கி அதிகம். காரணம் தொலைக்காட்சி நிறுவனங்களில் வேலை பெறுவதே இலக்காகக் கொண்டு இங்கு பயிற்சி அளிக்கப்படுவதே இதற்கு காரணம்.

சென்னையில் அண்ணாப் பல்கலைக் கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்.சி., எலக்ட்ரானிக்ஸ் மீடியா இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்புகளைப் படிக்க லாம்.

இதுதவிர விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பிலும் தொலைக்காட்சியில் பணிபுரி வதற்கான பயிற்சிகளும் வழங்கப்படு கின்றன. இப்படிப்பை சென்னையில் புதுக்கல்லூரி, லயோலா கல்லூரி, முகம்மது சதக் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி ஆகியவை வழங்குகின்றன.

பத்திரிக்கையியல் எங்கே படிக்கலாம்?

இரண்டாண்டு எம்.ஏ. ஜர்னலிஸம் தொடர்பான படிப்புகளை சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்குகின்றன.

நியூ மீடியா என்றால் என்ன?

இணையதளங்களே 'நியூ மீடியா' என்றழைக்கப்படுகின்றது. இணையதளங்களில் மட்டுமே வெளி யிடப்படும் பத்திரிக்கைகளின் எண்ணிக்கை இன்று அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்கு இந்தியாவில் விதையிட்டது டெஹல் காவைக் குறிப்பிடலாம். 1990களில் இந்தியாவில் இணையதளங்களின் எண்ணிக்கை நூறைக்கூடத் தொட வில்லை. ஆனால் இன்று பல லட்சங்களைத் தாண்டி பெருகிக் கொண்டே இருக்கின்றது. இந்தியாவில் மட்டும் 3 கோடிக்கும் மேற்பட்டோர் இணையதளங்களைப் பயன்படுத்து வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இணையதளங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பவர்கள் வெப் டிஸைனர்கள். வெப் டிஸைனிங் கற்றுத் தருவதற்கு பல தனியார் நிறுவனங்கள் உள்ளன. வெப் டிஸைன் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு இணையதள இதழ்களிலும், டாட் காம் நிறுவனங்களிலும் வேலைகள் கிடைக்கும்.


 
செய்திகள்