மும்பையில் தமுமுக தலைவர்

மராட்டிய மாநிலத்தில் மராட்வாடா பகுதியைச் சேர்ந்த 8 மாவட்டங்களின் முஸ்லிம் ஒருங்கிணைப்பு குழு கடந்த ஏப்ரல் 19, 20 ஆகிய தேதிகளில் இந்திய முஸ்லிம்களை எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனை பற்றி கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. இதில் 'இந்திய முஸ்லிம்களின் அரசியல் எதிர்காலம்' என்கிற தலைப்பில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் உரையாற்றினார்.



மும்பையில் கடந்த 20லி04லி08 அன்று மாலை சீத்தாகேம்பில் உள்ள ஆசாத் பள்ளிக்கூட மைதானத்தில் மும்பை தமுமுக சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ''சமுதாய வளர்ச்சி'' என்கிற தலைப்பில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


கடந்த ஏப்ரல் 19, 20 ஆகிய தேதிகளில் மும்பையில் சமுதாய நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் பிரபல மார்க்க அழைப்பாளர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களை சந்தித்து கலந்துரை யாடினார். உடன் மும்பை தமுமுக நிர்வாகிகள்.


 
செய்திகள்