வேலூர்
கோட்டை பள்ளிவாசலில் தொழுகை போராட்ட அறிவிப்பு! பெருகும் பேராதரவு!
தமீம்

வேலூரின் பிரம்மாண்டமான கோட்டைக்குள் அமைந்துள்ள பள்ளி வாசல் 1750லில் நிர்மாணிக்கப்பட்டதாகும். பளிங்கு கற்களால் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசல் தற்போது இந்தியத் தொல் பொருள் துறை கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது. தற்போது இந்தப் பள்ளி வாசலில் தொழுகைக்கு அனுமதிப்ப தில்லை. பள்ளிவாசலின் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.

வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக
முஸ்லிம்கள் வலியுறுத்தி வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் மற்றும் தொல்பொருள்
துறையிடம் தொழுகை நடத்த அனும திக்குமாறு முஸ்லிம்கள் கோரி வந்துள்ள னர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் இந்தக் கோரிக்கை பலமுறை
வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு
வந்துள்ளன. கடந்த செப்டம்பர் 12, 2005 அன்று இந்திய தொல்பொருள் துறையின்
இயக்குனர் அனுப்பியுள்ள கடிதத்தில், ''தொல் பொருள் துறையின் பாதுகாப்பின் கீழ்
வேலூர் கோட்டை பள்ளிவாசல் வந்த போது அங்கு வழிபாடு நடைபெற வில்லை என்றும், எனவே
தற்போது அப்பள்ளிவாசலில் வழிபாட்டை அனுமதிக்க இயலாது'' என்றும் தெரிவித்
துள்ளார். தொல்பொருள் துறையின் இந்த நிலைப்பாடு அதன் அப்பட்டமான பாரபட்சப்
போக்கை வெளிக்காட்டு கின்றது.

1921லில் இந்திய தொல்பொருள் துறை வேலூர் கோட்டையில் அமைந்துள்ள பள்ளிவாசல்
மட்டுமின்றி, வேலூர் கோட்டை, அதனைச் சுற்றியுள்ள நீர்நிலை, கோட்டை மைதானம்,
ஜலகண்டேஸ்வரர் கோயில், கிறிஸ்தவ தேவாலயம் உள்ளிட்ட வேலூர் கோட்டையின் 138
ஏக்கர்களை தனது பாதுகாப்பின் கீழ் எடுத்துக்கொண்டது. பழங்கால நினைவிடங்கள்
பராமரிப்பு சட்டம் 1904, 1952 மற்றும் 1958 சட்டத்தின் படி வேலூர் கோட்டை
முழுவதையும் தொல்பொருள் துறை தனது பராமரிப்பின் கீழ் கொண்டு வந்தது.
வேலூர் கோட்டை பள்ளிவாசலை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த நேரத்தில்
அங்கு வழிபாடு நடை பெறவில்லை. எனவே இப்போது அங்கு வழிபாடு நடத்த அனுமதிக்க
இயலாது என்று தொல்பொருள்துறை தற்போது கூறிக்கொள்கிறது. பள்ளிவாசலைப் போல் வேலூர்
கோட்டையில் அமைந் துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலையும் தொல்பொருள்துறை பொறுப்பில்
எடுக்கும்போது வழிபாடு நடைபெற வில்லை. இதேபோல் வேலூர் கோட் டையை தொல்பொருள்துறை
தனது கட்டுப்பாட்டின் கீழ் எடுக்கும் போது அங்கு பல அரசு அலுவலகங்கள்
செயற்படவில்லை. ஆனால் தற்போது திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காவலர் பயிற்சிக்
கல்லூரி, வட்டாட்சியர் அலுவலகம், வன அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், பொதுப்
பணித்துறை அலுவலகம், சுற்றுலா தகவல் மையம், சார்நிலை கருவூலம், வட்ட வழங்கல்
அலுவலகம், காவலர் மருத்துவமனை என 48 அரசு அலுவலகங்கள் தொன்மையான வேலூர்
கோட்டைக்குள் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர மூன்று சிறு கோயில்களும்
கோட்டைக்குள் புதிதாக கட்டப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகின்றது.
வேலூர் கோட்டை பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க மாட் டோம் என்ற தொல்பொருள்
துறையின் நிலைபாடு அதன் பாரபட்சப் போக்கை வெளிக்காட்டுகின்றது. வேலூர் கோட்
டைக்குள் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயில் உட்பட புதிதாக கட்டப்பட்டுள்ள மூன்று
சிறு கோயில்களில் வழிபாடு நடப்பதற்கும், 48 அரசு அலுவலகங்கள் முழுவீச்சில்
இயங்குவதற்கும் தொல் பொருள் துறை அனுமதித் திருக்கும் போது, பள்ளிவாசலில் தொழுகை
நடத்துவது மட்டும் பழம்பெரும் நினைவுச் சின்னத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று
கூறுவது எப்படி நியாயமாகும்?
இந்தப் பின்னணியில் (இன்ஷா அல்லாஹ்) வரும் மே மாதம் 9ம் தேதி பகல் 12:00 மணிக்கு
வேலூர் கோட்டை பள்ளிவாசலில் ஐவேளை தொழுகை நடத்த அனுமதிக்க கோரி வேலூர்
கோட்டைக்குள் உள்ள பள்ளிவாசலில் ஜும்ஆ (வெள்ளிக்கிழமை) தொழுகை நடத்தும்
போராட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நடத்தும் என அறிவித்துள்ளோம்.
நமது நியாயங் கள் உருது, தமிழ் மொழிகளில் அச்சிடப் பட்டு வினியோகிக்கப்பட்டு
வருகின்றன. முஸ்லிம் அல்லாத மக்களும், பொதுநல ஆர்வலர்களும் நமக்கு ஆதரவளித்து
வருவது ஒரு முக்கிய நிகழ்வாகும். நமது போராட்டம் புயலாய் வலுக்கிறது என்பதை
மத்திய மாநில அரசுகள் உணருமா?
